twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெட்ஃபிளிக்ஸ்சில் அந்தாலஜி... இணையும் நான்கு இயக்குநர்கள்

    |

    Recommended Video

    Four leading directors joining for the film anthology in Netflix

    சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் ஒரு அந்தாலஜி படம் ஒன்று உருவாக உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் எனப்படும் OTT பிளாட்பார்மில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

    காலத்திற்கேற்ப சினிமா துறையும் இன்று பல வகையில் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் வாடிக்கையாளர்கள் ஒரு வீடியோ சேவை தேவை என கோரிக்கை வைத்தால் அதற்கான கட்டணத்தை செலுத்தி இணையம் மூலமாக அதை டவுன்லோட் செய்து பார்க்கலாம். இந்த சேவை நெட்ஃபிளிக்ஸ் எனப்படுகிறது.

    Four leading directors joining for the film Anthology in Tamil Cinema

    இப்போது இந்த சேவை இந்தியாவிலும் வழங்கப்படுகிறது. எனவே திரைப்படங்கள் வெள்ளித்திரை மட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மூலமாகவும் வெளியிட முடியும். முதலில் ஹாலிவுட் படங்கள் தான் இப்படி வெளியாகி கொண்டிருந்தன. இப்போது இந்த கலாச்சாரம் இந்திய சினிமாவிலும் ஆரம்பித்திருக்கிறது.

    Four leading directors joining for the film Anthology in Tamil Cinema

    இப்படி ட்ரெண்டிங்காக இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் மூலம் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களான ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் ஜானர்ஜி மற்றும் கரன் ஜோகர் ஆகிய நான்கு இயக்குனர்களும் ஒன்று சேர்ந்து அந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் திரைப்படத்தை இயக்கி அதை நெட்ஃபிளிக்ஸ் மூலம் வெளியிட்டுள்ளனர்.

    அதே ட்ரெண்டில் நமது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் ஒரு அந்தாலஜி படம் உருவாக உள்ளது. தற்போது இந்த நான்கு இயக்குனர்களும் அவரவர் படங்களில் பிஸியாக இருப்பதால் அப்படங்கள் முடிவடைந்த பிறகு இந்த அந்தாலஜி படத்திற்கான வேலைகளை தொடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.

    Four leading directors joining for the film Anthology in Tamil Cinema

    கெளதம் மேனனின் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ஆம் தேதியும், வெற்றி மாறனின் அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது. எனவே அவர்கள் அந்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள்.

    அதே போல் சுதா கொங்கராவும் அவர் இயக்கிய சூரரை போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக உள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருக்கும் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலையில் மும்மரமாக இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

    Four leading directors joining for the film Anthology in Tamil Cinema

    இந்த நான்கு இயக்குனர்களும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருவதால் இந்த நெட்ஃபிளிக்ஸ் மூலம் வெளியாகப் போகும் படத்திற்கான வேலைகளை ஒத்தி வைத்துள்ளனர். இப்படத்தில் ஒவ்வொருவரும் கால் பங்கு அதாவது 25% வேலைகளை மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

    இதற்கு பெரிதாக கால அவகாசம் தேவைப்படாது. இயக்குனர்களை தவிர நடிகர், நடிகையர் என வேறு யாரையும் இது வரை தேர்வு செய்யவில்லை. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

    ரூ. 7 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய 'தல' வில்லன்ரூ. 7 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய 'தல' வில்லன்

    நான்கு இயக்குனர்களுக்கும் என்று தனித்தனி பாணி உண்டு. அதனால் இந்த நெட்ப்ளிக்ஸ்சில் ரிலீஸ் ஆகும் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.

    English summary
    An anthology film is being formed in the alliance of the leading directors of our Tamil film industry - Gauhtam Vasudev Menon, Vignesh Shivan, Vetrimaran and Sudha Kongara.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X