4 முன்னணி தமிழ் இயக்குனர்கள் ..ஒன்றாக இணைந்து இயக்கும் அந்தோலஜி திரைப்படம் !

சென்னை : தமிழ் சினிமா தற்போது பல்வேறு புதிய இயக்குனர்களை கொண்டு வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பலராலும் உற்று நோக்கப்படுகிறது.

அவ்வாறு தமிழில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் போன்றவர்கள் தங்களது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனித்தனியாக படங்களை இயக்கிக் கொண்டிருந்த இவர்கள் தற்போது முதன்முறையாக ஒன்றாக இணைந்து இயக்கவுள்ள திரைப்படத்தை பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் வெளியிட உள்ளது.

ஸ்டைலில் இயக்கி

ஸ்டைலில் இயக்கி

இயக்குனர்கள் பலரும் தங்களது படைப்புகளை தனித்தனி படங்களாக அவர்களது ஸ்டைலில் இயக்கி வெற்றி பெற்று வரும் நிலையில் சில சமயங்களில் ஒரு சில இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து மூன்று நான்கு கதைகளை ஒன்றாக இணைத்து அந்தோலஜி படங்களாக வெளிவந்துள்ளது.

சுயம்வரம்

சுயம்வரம்

1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார், செல்வா, சுந்தர் சி, பி.வாசு உட்பட பல இயக்குனர்கள் இணைந்து இயக்கிய சுயம்வரம் திரைப்படம் பல்வேறு இயக்குனர்களையும் பல்வேறு நடிகர்களையும் ஒன்றாக ஒரே படத்தில் இணைத்து பல கதைகள் ஒரே படத்தில் அமைந்தவாறு பல சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது.

வெளியாவது உண்டு

வெளியாவது உண்டு

இவ்வாறு உருவாக்கப்படும் அந்தோலஜி கதைகளை கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வெளியாவது உண்டு. அவ்வாறு சமீபத்தில் வெளியான அவியல் மற்றும் சில்லுக்கருப்பட்டி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் இயக்குனர்கள்

தமிழ் இயக்குனர்கள்

ஃபேண்டஸி படங்களுக்கு பெயர் போன சிம்புதேவன் தற்பொழுது கசடதபற என்ற அந்தோலஜி திரைப்படத்தை பல இளம் நடிகர்களை வைத்து இயக்கி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்பொழுது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பல முன்னணி தமிழ் இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர்.

ஒன்றாக இணைந்து

ஒன்றாக இணைந்து

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் என அனைவரும் தங்களுக்கான தனி ஸ்டைலில் படங்களை இயக்கி அவர்களுக்கான ரசிகர்களை பெற்று வரும் நிலையில் தற்பொழுது அனைவரும் ஒன்றாக இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தன்னுடைய பாகத்தில்

தன்னுடைய பாகத்தில்

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், தற்பொழுது இந்த அந்தோலஜி படத்தில் தன்னுடைய பாகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய்பல்லவியை வைத்து இயக்க உள்ளார்.

Recommended Video

Suriya dual role in vetrimaran Vadivaasal • Aruva, Hari
அஞ்சலி மற்றும் கல்கி

அஞ்சலி மற்றும் கல்கி

நடிகர் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் நடிகை அஞ்சலி மற்றும் கல்கி கோக்லின் வைத்து தனது பாகத்தை இயக்கவுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன்

சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா பவானி ஸ்ரீ, சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம் போன்ற நடிகர்களை வைத்து தனது பாகத்தை இயக்கவுள்ளார். மேலும் இவர் இயக்கும் பாகத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் டர்புகாசிவா

இசையமைப்பாளர் டர்புகாசிவா

தமிழில் காதல் படங்களை எடுப்பதில் மிகவும் பிரபலமான கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் அஸ்வின் குமாரை வைத்து தன்னுடைய பாகத்தை இயக்க உள்ளார். இதற்கு எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் டர்புகா சிவா இசையமைக்கவுள்ளார்.

அந்தோலஜி திரைப்படம்

அந்தோலஜி திரைப்படம்

தமிழில் தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களின் கூட்டணி இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த அந்தோலஜி திரைப்படம் இன்னும் பெயரிடப்படாத நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் நெட்ப்ளிக்ஸில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X