மொத்தம் நான்கு படங்கள்... அதுல ஜீனியஸுக்கு மட்டும் 275!
தமிழில் இன்று நான்கு படங்கள் வெளியாகின்றன.
Recommended Video

சென்னை: ஜீனியஸ், ஜருகண்டி உள்பட தமிழில் இன்று நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்திற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் இன்று ரிலீசாகியுள்ளது ரோஷன். அறிமுக நாயகன் ரோஷன் தயாரித்துள்ள இப்படத்தை, கடைக்குட்டி சிங்கம் படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்துள்ளது.

இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால், அவர்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவரைப் பற்றிய கதைக்களம் தான் ஜீனியஸ் படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இன்று ஜீனியஸுடன் சேர்த்து, ஜெய் நடித்த ஜருகண்டி, சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் நடித்த கரிமுகன் மற்றும் திருப்பதிசாமி குடும்பம் என நான்கு படங்கள் ரிலீசாகின்றன. இதில், ஜீனியஸ் படம் மட்டும் தமிழகத்தில் 150 திரையரங்குகளிலும், அமெரிக்கா, இலங்கை என வெளிநாடுகளில் 125 திரையரங்குகளிலும் ரிலீசாகிறது.
இன்றைய சூழலில் சிறு படங்களைத் தயாரிப்பதுகூட சுலபம், ஆனால், அதனை வெளியிடுவது தான் சிரமம். ஆனால், வெற்றிப்படங்களைத் தந்த சுசீந்திரன் என்ற பேனராலும், சக்தி பிலிம் பேக்டரியின் முயற்சியாலும் ஜீனியஸ் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











