இன்றைய ரிலீஸ்... தகராறு, ஈகோ, கல்யாண சமையல் சாதம்
சென்னை: ஆண்டின் கடைசி மாதம் என்பதால், இத்தனை நாட்கள் ஸ்டாக்கில் கிடந்த படங்களையெல்லாம் கிடைக்கிற அரங்குகளில் எப்படியாவது வெளியிட்டுவிடும் முனைப்பில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
தகராறு, ஈகோ, கல்யாண சமையல் சாதம் மற்றும் வெள்ளை தேசத்தின் இதயம் 1938 ஆகிய நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன.

தகராறு
தயாநிதி அழகிரி தயாரிக்க அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் இது. இந்தப் படம் அருள் நிதியை முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தும் என நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் விநாயகம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசை தரண்குமார்.

ஈகோ
ஆரம்பத்திலிருந்து ஈகோ என்றுதான் படத்தை விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஆனால் ஈஸ்வர் கோமதி என்பதுதான் உண்மையான தலைப்பாம் (திடீர்னு கேளிக்கை வரி ஞாபகம் வந்துடுச்சி போல). எஸ் சக்திவேல் எழுதி இயக்கியுள்ளார். வேலு, அனஸ்வரா நடித்துள்ளனர்.

கல்யாண சமையல் சாதம்
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்துள்ள இந்தப் படத்தை பிரசன்னா ஆர்எஸ் இயக்கியுள்ளார். டிபிகல் 'அய்யராத்து' படம் மாதிரி தோற்றம் தருகிறது, படத்தின் டிசைன்கள், ட்ரைலர் பாஷைகள்...

வெள்ளை தேசத்தின் இதயம் 1938
இந்தப் படமும் புதியவர்களின் முயற்சிதான். தெரிந்த முகம் என்றால் அது பரோட்டா சூரிதான். ஜூஹெய்ன் என்பவர் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











