»   »  நாளைக்கு தீபாவளி... இன்னிக்கே மூன்று படங்கள் ரிலீஸ்!

நாளைக்கு தீபாவளி... இன்னிக்கே மூன்று படங்கள் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளைக்கு தீபாவளி... எந்தப் பரபரப்பும் விறுவிறுப்பும் இல்லாமல் இப்படி ஒரு தீபாவளியை பலரும் இப்போதுதான் எதிர்கொள்கிறார்கள்.

சினிமா உலகிலும் இதுதான் நிலைமை. பெரிய எதிர்ப்பார்ப்பு... பரபரப்பு இல்லாமல் படங்கள் வெளியாகின்றன.

இந்த தீபாவளிக்கு நான்கு படங்கள். இன்று வெள்ளிக்கிழமை வேறு. எனவே இந்த நான்கில் மூன்று படங்கள் இன்றே திரைக்கு வந்துவிட்டன.

காஷ்மோரா

ஏக பப்ளிசிட்டியுடன் வெளியாகிறது கார்த்தியின் காஷ்மோரா. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

Four releases for this Deepavali

கொடி

தனுஷின் இரட்டை வேட நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொடி. இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

Four releases for this Deepavali

மேலும் இரண்டு படங்கள்

இந்த இரு படங்கள் தவிர, கடலை, திரைக்கு வராத கதை என இரு படங்கள் வெளியாகின்றன. இவற்றில் கடலை மகாபா ஆனந்த் படம். இந்தப் படம் நாளைதான் வெளியாகிறது. திரைக்கு வராத கதை இன்றே வெளியாகிவிட்டது. முழுவதும் பெண்கள் மட்டுமே நடித்த படம் இது.

English summary
Kashmora, Kodi, Kadala, Thiraikku Varatha Kadhai are the four new releases for this Deepavali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil