For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செக்க சிவந்த வானம் வெளியாகி 4 ஆண்டுகள்… மணிரத்னத்தின் 2K வெர்ஷன் கேங்ஸ்டர் படம் ஒரு மீள்பார்வை…

  |

  சென்னை: தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குநரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

  இந்தப் படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

  மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவான செக்க சிவந்த வானம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  மணிரத்னம் பண்ண வேலையை பார்த்து ராஜமெளலியே ஷாக் ஆகிட்டாரு.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் விஷயம்! மணிரத்னம் பண்ண வேலையை பார்த்து ராஜமெளலியே ஷாக் ஆகிட்டாரு.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் விஷயம்!

  கேங்ஸ்டராக திரும்பிய மணிரத்னம்

  கேங்ஸ்டராக திரும்பிய மணிரத்னம்

  கடல், ஓகே கண்மணி, காற்று வெளியிடை என லைட் மோட் காதல் ரொமாண்டிக் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த மணிரத்னம், திடீரென 'செக்க சிவந்த வானம்' பட அறிவிப்பை வெளியிட்டார். விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் என மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவான 'செக்க சிவந்த வானம்' 2018ல் வெளியானது. அதுவரை சோர்ந்துகிடந்த மணிரத்னம் கேங்ஸ்டர் ஜானரில் தாறுமாறாக கம்பேக் கொடுத்தார். படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அன்லிமிடெட் ஆக்சன் சீன்ஸ்கள் அனல் பறந்தன.

  தாதா அப்பாவும் மூன்று மகன்களும்

  தாதா அப்பாவும் மூன்று மகன்களும்

  சென்னை கேங்ஸ்டரான சேனாபதிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதராஜ், இரண்டாவது மகன் தியாகராஜ், கடைசியாக எத்திராஜ். ஒருநாள், சேனாபதியும் அவர் மனைவியும் காரில் செல்லும் போது வெடிகுண்டுகள் வீசி தாக்கப்படுகின்றனர். இந்த கொலை முயற்சி செய்தியைக் கேட்டு பதறி அடித்து ஓடிவரும் மூன்று மகன்களும். தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்தது யார்'? அவருக்குப் பின் வாரிசு யார் என்ற கேள்விகளோடு ரத்தம் தெறிக்கத் தெறிக்க செக்கச்சிவப்பாய் பரபரக்கும் திரைக்கதை.

  நான்கு முனை நாயகர்கள்

  நான்கு முனை நாயகர்கள்

  மணிரத்னம் தனது ஸ்டைலில் இயக்கிய இந்தப் படத்தில் சேனாதிபதியாக பிரகாஷ்ராஜ், அவரது மனைவியாக ஜெயசுதா, 3 மகன்களாக அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல் அரவிந்த்சாமி மனைவியாக ஜோதியாக, அருண்விஜய் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு காதலியாக டயனா எரப்பா, அரவிந்த்சாமியின் காதலியாக அதிதிராவ் நடித்திருந்தனர். இன்னொரு முக்கியமான கேரக்டரில் விஜய்சேதுபதி போலீஸ் ஆபிஸராக நடித்திருப்பார்.

  காட்சிக்கு காட்சி திருப்பம்

  காட்சிக்கு காட்சி திருப்பம்

  வரதனின் நண்பனும் போலீஸ் டிப்பார்ட்மெண்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவருமான விஜய் சேதுபதி தனியாக ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். அது சிறிய திருப்பத்தோடு படம் முடிகிறது. உறவுச் சிக்கல்களை விட்டுவிட்டு தாதா கதைக்குள் புகுந்து விளையாடியிருப்பார் மணிரத்னம். சேனாதிபதி தாக்கப்பட்டவுடன் அதை 'யார் செய்திருக்கக்கூடும்' என்பது மாதிரியான கதையாக துவங்கி, இடைவேளை தருணத்தில் தாதா குடும்பத்திற்குள் நடக்கும் போட்டியாக கதை பயணிக்கும். முதல் பாதியில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் சீக்கிரமே பார்வையாளர்களுக்கு புரிந்துவிட்டாலும் அதனை முழுமையாக அவிழ்க்காமல் படம் நெடுக்க எடுத்துச் சென்றது தான் இந்தப் படத்தின் வெற்றியாகும். தந்தையின் இடத்தைப் பிடிக்க மூன்று மகன்களும் நடத்தும் நரவேட்டைதான் படத்தின் மையப்புள்ளி.

  விஜய் சேதுபதி ட்வீட்

  விஜய் சேதுபதி ட்வீட்

  வழக்கம்போல மணிரத்னம் படம் என்றதும் இசையில் மாஸ் காட்டியிருப்பார் ஏஆர் ரஹ்மான். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் சும்மா நச்சென்று இருக்கும். இந்நிலையில், செக்க சிவந்த வானம் படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து, ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர். 4 இயர்ஸ் ஆஃப் செக்க சிவந்த வானம் என்ற ட்ரெண்டிங் தீயாய் பரவி வருகிறது. அதேபோல் விஜய்சேதுபதியும் தனது ட்விட்டரில் செக்க சிவந்த வானம் 4 ஆண்டுகள் என ட்வீட் செய்துள்ளார். இது மணிரத்னம் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.

  English summary
  Mani Ratnam directed Chekka Chivantha Vaanam movie was released in 2018. Simbu, Vijay Sethupathi, Arun Vijay, and Arvindsamy starred in this film and were well received by the fans. In this case, fans have been trending since it has been 4 years since the release of Chekka Chivantha Vaanam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X