அஜித் 58... நான்காவது முறையாக சிவாவுடன் கைகோர்த்த அஜித்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: அஜித்தின் 58வது படத்தையும் சிவாதான் இயக்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அஜித் தரப்பு.
அஜித்தை வைத்து வீரம் என்ற படத்தை முதலில் இயக்கினார் சிவா. அந்தப் படம் ஹிட்டடித்தது. அஜித் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த இயக்குநராகிவிட்டார் சிவா.

வேதாளம்
அடுத்து வேதாளம் படத்திலும் அஜித்துடன் இணைந்தார் சிவா. அந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்தார். இந்தப் படம் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பினாலும், பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

விவேகம்
மூன்றாவது படத்திலும் அஜித்துடன் இணைந்தார் சிவா. அது விவேகம். இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார். படம் சரியாகப் போகவில்லை என்றாலும், தயாரிப்பாளர் அமைதிகாத்தார். எனவே அடுத்த படமும் அவருக்குத்தான் செய்வார் அஜித் என்ற பேச்சு இருந்தது. ஆனால் இயக்குநர் மாறக்கூடும் என்றனர்.

விக்ரம் வேதா
விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கக் கூடும் என்றனர். ஆனால் இயக்குநர் சிவாவுக்கு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை அஜித். நான்காவது முறையாக சிவாவுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாக
இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்தின் 58வது படத்தை சிவா இயக்குகிறார், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











