ராஜதந்திரம் படத்தை வாங்கியது ஃபாக்ஸ் ஸ்டார்!

By Shankar

ராஜதந்திரம் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வாங்கி உலகெங்கும் வெளியிடுகிறது.

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழில் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தது ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார். தொடர்ந்து ராஜாராணி, குக்கூ போன்ற படங்களைத் தயாரித்தது. முண்டாசுப்பட்டி போன்ற படங்களை வாங்கி வெளியிட்டது.

இப்போது ராஜதந்திரத்தை வாங்கியுள்ளது.

ரெஜினா

ரெஜினா

வீரா, ரெஜினா கெசன்ட்ரா, பட்டியல் சேகர், அஜய் பிரசாத், மற்றும் புதுமுகமான தரூபுக்கா சிவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜதந்திரம்' படத்தை ஏ.ஜி.அமீத் என்பவர் இயக்கியுள்ளார்.

புதுமை வெளியீடு

புதுமை வெளியீடு

படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் இப்படத்தின் டீசரையும் படக் குழுவினர் ராஜதந்திரமாய் வெளியிட்டனர். படத்தில் இடம்பெறும் முக்கிய 6 கதாபாத்திரங்களின் சுபாவம் வெளிப்படும் வகையில் இப்படத்தின் டீசர்களை 6 விதமாக உருவாக்கி, அவற்றை 6 திரை நட்சத்திரங்கள் ட்விட்டர் மூலமாக வெளியிட்டனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு டீசர் ட்விட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

கவுதம் மேனன் - ஜிவி பிரகாஷ்

கவுதம் மேனன் - ஜிவி பிரகாஷ்

இப்படத்தை வொய்ட் பக்கெட் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சன்லேன்ட் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

முதல் படமே..

முதல் படமே..

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறும்போது, "எங்களது முதல் தயாரிப்பான ‘ராஜதந்திரம்' மூலமாக ஃபாக்ஸ் ஸ்டார் போன்ற பெரும் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதை எண்ணி பெருமையடைகிறோம். இந்த கைகோர்ப்பின் மூலம் பல்வேறு இடங்களிலிருந்து பெருவாரியான ரசிகர்களை சென்றடைய வாய்ப்பு பெருகியுள்ளது. இது எங்களுக்கு பெரும் வரவேற்பும் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான படமாக மாறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது," என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X