முண்டாசுப்பட்டி & வி சத்திரம்: சூது கவ்வும் தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் ஃபாக்ஸ் ஸ்டார்!

By Shankar

மும்பை: தமிழில் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி படங்களை ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், அடுத்து சூது கவ்வும் படத் தயாரிப்பாளர் சிவி குமாருடன் கை கோர்க்கிறது.

முதல்கட்டமாக முண்டாசுப்பட்டி மற்றும் வி சத்திரம் ஆகிய இரு படங்களைத் தயாரிக்க இரு நிறபவனங்களும் ஒப்பந்தம் போட்டுள்ளன.

ஏஆர் முருகதாசுடன்

ஏஆர் முருகதாசுடன்

இயக்குநர் ஏ ஆர் முருகதாசின் ஏஆர்எம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து முதல் படமாக எங்கேயும் எப்போதும் படத்தைத் தயாரித்தது ஃபாக்ஸ் ஸ்டார். அந்தப் படம் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து வத்திக்குச்சி படத்தைத் தயாரித்தன இரு நிறுவனங்களும். சுமாராகத்தான் போனது இந்தப் படம். அடுத்து ராஜாராணி மற்றும் குக்கூ ஆகிய படங்களை இந்த நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தியிலும் இதே கூட்டணி...

இந்தியிலும் இதே கூட்டணி...

தமிழில் இந்தப் படங்களைத் தொடர்ந்து, ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தையும் தயாரிக்கிறது ஃபாக்ஸ் ஸ்டார். இந்தியில் தொடர்ந்து ஏஆர் முருகதாஸுடன் இணைந்து படங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழில் இன்னொரு தயாரிப்பாளருடன் கைகோர்க்கிறது ஃபாக்ஸ் ஸ்டார்.

சிவி குமாருடன்...

சிவி குமாருடன்...

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்கள் தந்த சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைகிறது ஃபாக்ஸ் ஸ்டார்.

நினைச்சே பாக்கல...

நினைச்சே பாக்கல...

இதுகுறித்து சிவி குமார் கூறுகையில், "பல ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஸ்டுடியோக்களைப் பார்த்து, நாமும் தயாரிப்பாளராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் இப்போது நான் பார்த்து பிரமித்த ஸ்டுடியோக்களில் ஒன்றான ஃபாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து படம் தயாரிப்பேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என் கனவு நனவாகியிருக்கிறது," என்றார்.

விஜய் சிங்

விஜய் சிங்

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவன சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "தமிழில் மேலும் பரந்த அளவில் கால் பதிக்க ஃபாக்ஸ் ஸ்டார் விரும்புகிறது. ஏஆர் முருகதாசுடனான எங்களின் கூட்டணி இந்தியிலும் தொடரும் நிலையில், தமிழில் சிவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X