Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிரான்ஸ்ல இருந்து வர்றாங்களாம்... விஜய் ஆண்டனி ஜோடியாக புது ஹீரோயின்
சென்னை: காக்கி படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக பிரான்ஸ் நடிகை நடிக்கிறார்.
பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தை முடித்துவிட்ட, விஜய் ஆண்டனி, அடுத்து அக்னிச் சிறகுகள் மற்றும் காக்கி படங்களில் நடித்துவருகிறார்.
அக்னிச் சிறகுகள்
அக்னிச் சிறகுகள் படத்தை நவீன் இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய், அக்ஷரா ஹாசன், ரைமா சென் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது. அடுத்தும் வெளிநாடு செல்ல இருக்கின்றனர்.
நடிகர் ஶ்ரீகாந்த்
காக்கி படத்தை 'வாய்மை' செந்தில்குமார் தனது ஓபன் தியேட்டர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார். இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
யூனிபார்ம் போடலைன்னாலும்
கடந்த சில நாட்களுக்கு முன், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பானது. அதில், 'யூனிபார்ம் போடலைன்னாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே 'காக்கி' என்று எழுதப்பட்டிருந்தது.
மீண்டும் ஷூட்டிங்
இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்தது. அக்னிச் சிறகுகள் படத்துக்காக படக்குழு ரஷ்யா சென்றதால், காக்கி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது சென்னையில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
பிரான்ஸ் நடிகை
இந்நிலையில், இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் பிரான்ஸ் நடிகை. அங்கு சில படங்களில் நடித்துள்ள அவர் யார் என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.