ரூ. 2 கோடி மோசடி, கொலைமிரட்டல்: விமல் மீது தயாரிப்பாளர் போலீசில் புகார்
Recommended Video

சென்னை: நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கணேசன் புகார் அளித்துள்ளார்.
விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் ஜூலி நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கணேசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஜி.கே.ஸ்டூடியோவும் நடத்தி வருகிறேன். ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை. நான் ரூ.1.75 கோடி படத் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளேன். எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் என்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப்பார்க்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











