twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. இலவச மருத்துவ முகாம்!

    |

    சென்னை : விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரவிருக்கும் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் சென்னை மாவட்ட தலைமை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    Free medical camp for Vijay Sethupathis birthday

    அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது.

    Free medical camp for Vijay Sethupathis birthday

    மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு நாளைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது என்று விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.

    Free medical camp for Vijay Sethupathis birthday

    தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல நல திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.

    கட் அவுட், திரைப்படம் வெளியானதும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது மட்டுமே ரசிகர்களின் வேலை இல்லை என்பதை விஜய் சேதுபதி ரசிகர்கள் நன்கு உணர்ந்து உள்ளார்கள். தொடர்ந்து பல இடங்களில் நற்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

    English summary
    Free medical camp for Vijay Sethupathi's birthday
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X