பீஸ்ட் டிக்கெட் வாங்கினா... என்ன மாதிரி ஆஃபர் கொடுத்திருக்காங்க பாருங்க!
விருதுநகர் : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் தெறிக்க காத்திருக்கிறது. ரசிகர்களும் படத்தின் ரிலீசுக்காக மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசையொட்டி பல சுவாரஸ்யங்கள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே காம்பினேஷனில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். தெலுங்கில் பூஜா ஹெக்டே முன்னணி நாயகியாக இருந்தாலும் பீஸ்ட் படம் மூலமே இவர் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக ஜீவாவுடன் முகமுடி படத்தில் இவர் நடித்திருந்தார்.

தெலுங்கில் முன்னணி
அந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் பூஜா ஹெக்டேவிற்கு அந்தப் படம் கைகொடுக்கவில்லை. அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு, இந்தியில் தன்னை என்கேஜ் செய்துக் கொண்டார் பூஜா. தொடர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

தமிழில் ரீ என்ட்ரி
இதை தொடர்ந்தே தற்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்த காம்பினேஷன் தற்போது சிறப்பாக அமைந்துள்ளது. இருவருக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளதாக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாடல்களிலும் விஜய்க்கு ஈடுகொடுத்து பூஜா ஆடியுள்ளார்.

பீஸ்ட் திருவிழா
படத்தின் ரிலீஸ் நாளைய தினம் நடக்கவுள்ளதையடுத்து பல இடங்களில் விஜய் ரசிகர்கள் பேனர்கள் மூலம் விஜய் மீதான தங்களது விருப்பத்தை பதிவு செய்து வருகின்றனர். புக்கிங்கிலும் தங்களது மாசை காட்டி வருகின்றனர். நாளைய தினம் பீஸ்ட் திருவிழாவை மேற்கொள்ளவுள்ளனர்.

5 டிக்கெட்டுகள் வாங்கினால் இலவச பெட்ரோல்
இந்நிலையில் விருதுநகரில் கேகேஎஸ்ஆருக்கு சொந்தமான ராஜலட்சுமி மற்றும் அமிர்தராஜ் திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்டுகள் 5 வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சி காலை 7 மணிக்கே துவங்கவுள்ளது.

கோடைக் கொண்டாட்டம்
ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த ஷோக்களுக்கான கட்டணம் 300 முதல் 400 வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழ் புத்தாண்டு மற்றும் கோடை கொண்டாட்டமாக இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











