மகள் உடை விவகாரம்: பொட்டில் அடித்தார் போல் பதில் அளித்த ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை: தன் மகளின் உடையால் தன்னை கலாய்த்தவர்களுக்கு ஒரேயொரு புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர் விருது வாங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா முகத்தை மறைத்துக் கொண்டு நிகாப் அணிந்து மேடையில் பேசினார்.

ரஹ்மான்
கதிஜாவுக்கு புர்கா அணியாமல் வெளியே செல்ல பிடிக்காது. அவர் கண்கள் மட்டுமே தெரியும்படி புர்கா அணிவார். இந்நிலையில் அவர் மேடையில் கண்கள் மட்டுமே தெரியும் வகையில் நிகாப் அணிந்ததை பார்த்தவர்கள் ஏ.ஆர். ரஹ்மான் இரட்டை வேடம் போடுவதாக அவரை விளாசினார்கள்.
மகள்கள்
கதிஜாவின் உடைக்காக மக்கள் விளாசுவதை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி, மகள்கள் இருக்கும் ஒரேயொரு புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

மகள்
ரஹ்மான் வெளியிட்ட புகைப்படத்தில் அவரின் மனைவி சுடிதார் அணிந்து துப்பட்டாவை வைத்து தலையில் முக்காடு போட்டுள்ளார். கதிஜா புர்கா அணிந்துள்ளார். மற்றொரு மகளான ரஹிமா தலையில் முக்காடு அணியவில்லை. மகள்களாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி உடை அணிவது அவர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் ரஹ்மான்.
புர்கா
ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பிறகும் இது போன்ற சிலர் எதையும் புரிந்து கொள்ளாமல் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











