டெல்லி கற்பழிப்பு சம்பவம்: 'ப்ரீடம்' எனும் சினிமாவாக காந்தி பிறந்த நாளில் வெளியாகிறது!

By Shankar

சென்னை: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி 6 பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ப்ரீடம் என்ற தலைப்பில் சினிமாவாக காந்தி பிறந்த நாளில் வெளியாகிறது.

ஆர்எம்எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் இந்தப் பட்த்தை வெளியிடுகிறது.

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. வெட்கித் தலைகுனியச் செய்தது.

ஆஜ் கி ப்ரீடம்

ஆஜ் கி ப்ரீடம்

அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் "ஆஜ் கி பிரீடம்" என்ற பெயரிலும் தமிழில் ப்ரீடம் என்ற தலைப்பிலும் படமெடுத்துள்ளனர்.

நாயகி பெயர் ஜோதி

நாயகி பெயர் ஜோதி

சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் பாத்திரப் பெயராக வைத்திருக்கிறார் இயக்குனர்.

காந்தி பிறந்த நாளில்

காந்தி பிறந்த நாளில்

இந்த படம் அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் வெளியிடுகிறார்கள். பெண்ணின் சுதந்திரம் குறித்து கவலைப்பட்ட மகாத்மாவின் பிறந்த நாளில் இப் படத்தை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் டான் கவுதம் கூறியுள்ளார்.

தனியாக நடமாட முடியவில்லையே

தனியாக நடமாட முடியவில்லையே

மேலும் அவர் கூறுகையில், "ஒரு இந்திய பெண் உடல் முழுக்க நகைகளுடன் நள்ளிரவு சாலையில் தனியாக எப்போது நடந்து போக முடிகிறதோ அப்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா!

ஆனால் இன்றைய நிலை அப்படியா இருக்கிறது... பட்டப் பகலிலேயே பெண்கள் தனியாக நடமாட முடியவில்லையே," என்றார்.

தமிழ்ப் பெண்

தமிழ்ப் பெண்

ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே நடித்திருக்கிறார். கதை , திரைக்கதை , வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறேன் என்கிறார் டான் கெளதம்.

அமிதாப் கவிதை

அமிதாப் கவிதை

ஜோதியைப் பற்றி அமிதாப்பச்சன் ஒரு கவிதை எழுதி இருந்தார். அந்தக் கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிருத் பதக் இசையில் பாடலாக்கி இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X