பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் தொடங்கும் 'அந்த' டாஸ்க்... கதறப்போகும் ஹவுஸ்மேட்ஸ்.. கசிந்த தகவல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் சிறப்பு டாஸ்க் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்துள்ளது.

இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

தனிமைப்படுத்தப்பட்டனர்

இந்த ஆண்டு கொரோனா காரணமாக வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் 15 நாட்களுக்கு முன்பே ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் சாங்

ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் சாங்

கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிரபலங்களோ பழைய போட்டியாளர்களோ கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் சாங் என எதுவாக இருந்தாலும் விர்ட்சுவல் முறையிலும் ஹவுஸ்மேட்டுகளாலும் மட்டுமே நடத்தப்படுகிறது.

கேள்வி குறியாக?

கேள்வி குறியாக?

கிறிஸ்துமஸை முன்னிட்டு நடத்தப்பட்ட லைட் மியூஸிக் கச்சேரியும் ஹவுஸ்மேட்ஸ் பாதிக்கப்படாத வகையில் கண்ணாடி சுவரால் தடுக்கப்பட்டு கச்சேரி நடத்தப்பட்டது. ஒவ்வொரு விஷயமும் இத்தனை கட்டுப்பாடுகளும் நடப்பதால் கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்படுமா என்பது கேள்வி குறியாக இருந்தது.

ஃபிரீஸ் டாஸ்க்?

ஃபிரீஸ் டாஸ்க்?

இந்நிலையில் நாளை முதல் பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்மாவில் ஒளிபரப்பப்படும் வீடியோவை பார்த்தே ஹவுஸ்மேட்ஸ் கதறுகின்றனர்.

என்ன கதறு கதறுவார்களோ?

என்ன கதறு கதறுவார்களோ?

இந்நிலையில் தங்களின் குடும்பத்தினரை பார்த்தால் ஹவுஸ்மேட்ஸ் என்ன கதறு கதறுவார்களோ என இப்போதே யோசிக்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை என்று கூறி வரும் நிலையில் நாளை முதல் எப்படி இருக்கும என்றும் எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X