Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அசாமில் அக்காவுக்கு கல்யாணம்... ஃபாரின் காதலனுடன் பறந்து வந்த ஃபிரீடா
கவுகாத்தி: தனது சகோதரி திருமணத்தில், காதலன் கோரி டிரானுடன் கலந்துகொண்ட 'ஸ்லம்டாக் மில்லினர்' ஃபிரீடா பின்டோ புகைப்படம் வைரலாகி வருகிறது.
'ஸ்லம்டாக் மில்லினர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த ஃபிரீடா பின்டோ. ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், ரோஹன் அன்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவரை பிரிந்த ஃபீரிடா, ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் படேலை காதலித்தார். இந்தக் காதலும் முறிந்தது.
இப்போது, சாகசப் புகைப்படக் கலைஞரான கோரி டிரானை காதலித்து வருகிறார். ஃபிரீடாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆரோன் பாலின் நண்பர்தான், கோரி டிரான். முதலில் நட்பாக பழகியவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தனர்.
எனது ஹீரோ இயக்குனர் மித்ரன் தான்... சின்மயி ட்விட்
இந்நிலையில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கடந்த மாதம் அறிவித்தார் ஃபிரீடா. விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஃபிரீடாவின் அக்கா ஷரோன் திருமணம் அசாம் மாநிலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் வருங்கால கணவர் கோரி டிரானுடன் கலந்துகொண்ட ஃபிரீடா, இந்திய முறைப்படி உடை அணிந்திருந்தார். கோரி டிரான், குர்தா, பைஜாமா அணிந்து அமர்க்களமாக வந்திருந்தார்.
இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஃபிரீடா. இது வைரலாகி வருகிறது.