கொடூரமான முறையில் என்னை பலாத்காராம் செய்தார்.. பிரபல ஆஸ்கர் இயக்குநர் மீது நடிகை பரபர புகார்!

பாரீஸ்: ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி தன்னை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரெஞ்ச் நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர் இயக்கிய தி பியானிஸ்ட் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார் ரோமன் போலன்ஸ்கி.

தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ஷரன் டேட் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். 1970 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது ஒரு கலவரத்தில் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்தார்.

போலீஸ் தேடல்

போலீஸ் தேடல்

இதனை தொடர்ந்து 1977ஆம் ஆண்டு பதிமூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் சென்று வசிக்க ஆரம்பித்தார்.

ஆஸ்கர் அகாடமி

ஆஸ்கர் அகாடமி

ன்றும் அந்த வழக்கில் அமெரிக்க போலீஸ் ரோமன் போலன்ஸ்கியை தேடி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஆஸ்கர் அகாடமியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
தற்போது ரோமன் போலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.

கொடூரமாக பலாத்காரம்

கொடூரமாக பலாத்காரம்

இந்நிலையில் ரோமன் போலன்ஸ்கி மீது பெண் ஒரு பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவர், 1975ஆம் ஆண்டு தனக்கு 18 வயதாக இருந்தபோது அங்குள்ள ரிசார்ட்டில் வைத்து ரோமன் போலன்ஸ்கி தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

நாளிதழில் பேட்டி

நாளிதழில் பேட்டி

தற்போது 60 வயதை கடந்துள்ள மோன்னியர் என்ற அந்த பெண் பிரெஞ்சின் லி பாரீஸியன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்து உடனேயே சிலரிடம் இதுகுறித்து மோன்னியர் கூறியதாகவும் சிலர் தெரிவித்ததாகவும் அந்த செய்தி தெரிவித்திருக்கிறது.

பேயாக பின்தொடருகிறது

பேயாக பின்தொடருகிறது

மேலும் பலாத்காரம் ஒரு டைம் பாம்ப் என்றும் மோன்னியர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த நினைவு மங்காது என்றும், அது ஒரு பேயாக மாறி அது உங்களைப் பின்தொடர்கிறது, அது உங்களை நயவஞ்சகமாக மாற்றுகிறது என்றும் மோன்னியர் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகள் கழித்து

40 ஆண்டுகள் கழித்து

இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் "J'Accuse" என்ற படம் அடுத்த வாரம் பிரான்ஸில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் 40 ஆண்டுகள் கழித்து மோன்னியர், ரோமன் போலன்ஸ்கி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தகவலை தெரிவித்திருக்கிறார்.

ஆடைகளை கிழித்து

ஆடைகளை கிழித்து

மேலும் ஸ்கை ட்ரிப்பின் போது டின்னர் முடித்தவுடன் ரோமன் போலன்ஸ்கி தன்னை மாடிக்கு அழைத்தாகவும், மாடிக்கு சென்ற போது அவர் நிர்வாணமாக இருந்தார் என்றும் கூறிய மோன்னியர், தான் சதாரிப்பதற்குள் தன்னை தாக்கி தனது ஆடைகளை கிழித்து கழட்டி தன்னை பலாத்காரம் செய்து விட்டாதாக கூறியிருக்கிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால் ரோமன் போலன்ஸ்கியின் வழக்கறிஞர் நாளிதழின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் "J'Accuse" படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X