»   »  இந்த வாரமும் 6 புதுப்படங்கள்.. திங்கள் வரை தாக்குப் பிடிக்குமா?

இந்த வாரமும் 6 புதுப்படங்கள்.. திங்கள் வரை தாக்குப் பிடிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியான படம் அது. வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில், சென்னையின் நுழைவாயிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற அரங்குக்கு சென்றிருந்தோம். நம்ப மாட்டீர்கள், வெறும் 22 பேர்தான் அரங்குக்குள் இருந்தனர். படம் ஆரம்பமாகிவிட்டது. மேட்னி!

வெளியாகும் புதுப்படங்களின் நிலை அப்படியாகிவிட்டது.

சிறு படங்கள், சுமார் பட்ஜெட் படங்கள் என்ற பெயரில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக வெளியாகும் புதுப் படங்கள், செவ்வாய்க் கிழமையன்றே காலியாகிவிடுவதுதான் இன்றைய நிலை.

பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால், ரசிகர்கள் என்ற பெயரில் அந்தப் படங்களைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகளைப் பரப்பி, கூட்டமே இல்லாமல் செய்துவிடும் நிலையும் தொடர்கிறது.

இந்த சிக்கல்களை உண்மையிலேயே தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களால் சமாளிக்கவே முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்தவும் ஆரம்பித்துள்ளனர். உதாரணம், நேற்று தயாரிப்பாளர் சங்கம் முன் ஒரு இயக்குநர் நடத்திய போராட்டம்.

இப்படியொரு சூழலில் இன்று ஆறு புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

என்வழி தனி வழி

என்வழி தனி வழி

ஆர்கே நாயகனாக நடித்துள்ள படம் இது. ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். இருவரின் கூட்டணியில் முதலில் வெளியான எல்லாம் அவன் செயல் நல்ல படம். பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். அப்போது இந்தப் படத்துக்குப் பெயர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. பின்னர் இபிகோ என்று மாற்றப்பட்டது. கடைசியில் 'எவதவ' வாகிவிட்டது. சென்னையில் 15 அரங்குகளில் வெளியாகியுள்ளது.

சேர்ந்து போலாமா

சேர்ந்து போலாமா

வினய், மதுரிமா நடித்துள்ள சேர்ந்து போலாமா படத்தை அனில்குமார் இயக்கியுள்ளார். சசி நம்பீசன் தயாரித்துள்ளார். விஷ்ணு மோகன் சித்தாரா இசையமைத்துள்ளார்.

எனக்குள் ஒருவன்

எனக்குள் ஒருவன்

கன்னடத்தில் வெற்றி பெற்ற லூசியா படத்தின் தமிழ்ப் பதிப்பு. சித்தார்த், தீபா சன்னிதி, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 200 அரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.

தொப்பி

தொப்பி

முரளி ராம், ரக்ஷயா ராஜ் நடித்துள்ள இந்தப் படத்தை யுரேகா இயக்கியுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராம்பிரசாத் சுந்தர் இசையமைத்துள்ளார்.

ரொம்ப நல்லவன்டா நீ

ரொம்ப நல்லவன்டா நீ

ஏ வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் ‘மிர்ச்சி' செந்தில், ஸ்ருதி பாலா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் ‘ரோபோ' சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக டிவிடியாக வெளியாகியுள்ளது சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை. இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்தால், ஒரு மாற்று வழி பிறக்கும்.

இவை தவிர, சுதீப் நடித்த கன்னடப் படம் ஒன்று முரட்டு கைதி என்ற பெயரில் வெளியாகிறது.

English summary
As usual there are six Tamil film released this Friday with meagre screens.
Please Wait while comments are loading...