கண்பேசும் வார்த்தைகள் உள்பட இன்று நான்கு படங்கள் வெளியீடு
இன்று வெள்ளிக்கிழமை... அசாதாரண படங்கள் என்று எதுவும் இன்று வெளியாகவில்லை.
கருப்பம்பட்டி, கண்பேசும் வார்த்தைகள், மறந்தேன் மன்னித்தேன், நானும் என் ஜமுனாவும் ஆகிய நான்கு படங்கள் இன்று திரையைத் தொடுகின்றன.
இந்தப் படங்கள் குறித்து ஒரு பார்வை...

கருப்பம்பட்டி
சுந்தர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபு ராஜசோழன் இயக்கியிருக்கும் படம் இது. எஸ் எஸ் தமன் இசையமைத்துள்ளார். அவர் இசையில் ஒரு பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் பப்பிலஹிரி. அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஜோடியாக நடித்துள்ளனர்.

கண் பேசும் வார்த்தைகள்
‘சரவணன் மீனாட்சி' செந்தில், இனியா நடித்துள்ள படம் கண்பேசும் வார்த்தைகள். கடைசி நேரத்தில் இந்தப் படம் வருமா என நிலைமை ஏற்பட்டது. ஆனால் தடை விலகி, இன்று வெளியாகிறது. ஸ்ரீ பாலாஜி சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. பாலாஜி இயக்கத்தில் ஷமந்த் இசையமைத்திருக்கிறார்.

நானும் என் ஜமுனாவும்
குருராஜா இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜா முத்துப்பாண்டியன் - ஜெயதமிழ் இணைந்து இயக்கியிருக்கும் படம் நானும் என் ஜமுனாவும். ரபி தேவேந்திரன் இசையமைத்துள்ளார். ஜெயந்த், பவுலமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மறந்தேன் மன்னித்தேன்
தெலுங்கில் வெளியான குண்டெல்லோ கோடாரி படத்தை தமிழில் மறந்தேன் மன்னித்தேன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். இளையராஜாவின் இசைதான் படத்தின் ஹைலைட். தெலுங்கில் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டன பாடல்களும் படமும்.


Click it and Unblock the Notifications











