Don't Miss!
- Sports டபுள் ஹாட்ரிக் எடுத்தால் தான் வென்று இருக்க முடியும்! பிட்ச் மோசம் இல்ல-நாங்க தான்!சுப்மன் கில் கலகல
- Lifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இன்றைய படங்கள்... காவியத் தலைவன், மொசக்குட்டி, விஞ்ஞானி, வேல்முருகன் போர்வெல்ஸ்!
வழக்கம் போல இந்த வெள்ளிக்கிழமையும் ஏகப்பட்ட படங்கள். ரசிகர்களை திணறடிக்கும் வகையில் 6 படங்கள் ரிலீசாகின்றன.
அவை காவியத் தலைவன், மொசக்குட்டி, ஆ, விஞ்ஞானி, வேல்முருகன் போர்வெல்ஸ், இனிப்பு புளிப்பு மற்றும் மொழி மாற்றுப் படமான என் பெயர் பவித்ரா.
உண்மையில் இன்று 9 படங்கள் வெளியாக இருந்தன. மூன்று படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டன.
காவியத் தலைவன்
இந்தப் படங்களில் பட்ஜெட் மற்றும் உருவாக்கம் போன்றவற்றில் மிகவும் கவனத்துக்குரிய படம் காவியத் தலைவன்தான். நல்ல அரங்குகளில் வெளியாகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வசந்த பாலன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், பிருத்வி ராஜ், வேதிகா நடித்துள்ளனர்.
மொசக்குட்டி
மைனா, சாட்டை படங்களைத் தந்த ஷலோம் ஸ்டுடியோ தயாரிக்க, ஜீவன் இயக்கியுள்ள இந்தப் படமும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக உள்ளது. ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். வீரா நாயகனாக அறிமுகமாக, மகிமா நாயகியாக நடித்துள்ளார்.
விஞ்ஞானி
விவசாயத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வந்திருக்கும் இன்னொரு படம் விஞ்ஞானி. நாசாவில் பணியாற்றிய பார்த்தி என்பவர் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் விஞ்ஞானி. மீரா ஜாஸ்மின் நாயகி. விவேக்கும் உண்டு.
ஆ
5 பேய்க் கதைகளை தொகுத்து ஒரு மெகா பேய்ப் படமாக உருவாக்கியுள்ளனர், அம்புலி படம் தந்த ஹரி - ஹரீஷ்.
வேல் முருகன் போர்வெல்ஸ்
கஞ்சா கருப்பு தயாரிப்பில் ரொம்ப நாளாக கிடப்பிலிருந்த இந்தப் படம் இன்று வெளியாகிறது. எம்பி கோபி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை.
புளிப்பு இனிப்பு
மடிசார் மாமி என்ற தலைப்பில் உருவான இந்தப் படம் இப்போது புளிப்பு இனிப்பாக மாறியுள்ளது. ரஞ்சித் போஸ் இயக்கியுள்ளார்.
என் பெயர் பவித்ரா
ஸ்ரேயா தெலுங்கில் விலைமாதுவாக நடித்த பவித்ரா படம் தமிழில் என் பெயர் பவித்ரா என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ளார்.