twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பந்த் முடிந்தது... பகிரி, சூர்யகாந்தி, சதுரம் 2, நாயகி... என்ன படம் பார்க்க உத்தேசம்?

    By Shankar
    |

    காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று ஆளும் கட்சி தவிர அனைத்துத் தரப்பினரும் நடத்திய 12 மணி நேர பந்த் முடிந்துவிட்டது.

    இன்று வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியாகியிருந்தாலும், பந்த்-துக்கு ஆதரவு தரும் வகையில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்திருந்தன அனைத்து திரையரங்குகளும்.

    மாலை 6 மணிக்குப் பிறகுதான் புதுப் படங்களின் முதல் காட்சியே தமிழகத்தில் தொடங்குகின்றன.

    இன்று வெளியாகியுள்ள படங்கள்:

    பகிரி

    பகிரி

    இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் பகிரி. செம போல்ட் அட்டம்ப்ட் என பார்த்தவர்கள் பாராட்டியுள்ள இந்தப் படத்தின் நிஜ நாயகன் வசனங்கள்தான்.

    டாஸ்மாக்கில் வேலைப் பார்க்க ஆசைப்படும் நாயகன், அவனுக்கு உதவும் நாயகி மற்றும் மாமியார், இதற்கு தீவிர எதிர்ப்பு காட்டும் நாயகனின் அப்பா... இப்படி ஒரு கதை. டாஸ்மாக்கால் ஏற்படும் தீமைகளுக்கு எதிரான கோனார் நோட்ஸ் என்று கூட இந்தப் படத்தைச் சொல்லலாம். நிறைய புதுமுகங்கள் என்றாலும் அந்த குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர். இந்த வார முதல் சாய்ஸ் பகிரிதான்.

    சதுரம் 2

    சதுரம் 2

    சுமந்த் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள படம் சதுரம் 2. சமூகத்தின் மீதான தனி மனிதக் கோபம் எப்படி கொடூரக் கொலைகளாக மாறுகிறது என்பதை தலை வலிக்குமளவுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வெளியான SAW டைப் படம் என்று அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் பொறுப்பல்ல!

    உச்சத்துல சிவா

    உச்சத்துல சிவா

    ரொம்ப நாள் கழிச்சி கரண் நடித்துள்ள படம் இந்த உச்சத்துல சிவா. தயாரிப்பாளரும் இவரேதான். ஹீரோயினாக நேகா மற்றும் ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை வித்யாசாகர். இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 5மணிக்குள் நடக்கும் கதை.

    நாயகி

    நாயகி

    தெலுங்கில் அவுட் என தகவல் வந்ததுமே, இந்தப் படத்துக்கான மரியாதை இறங்கிவிட்டது பாக்ஸ் ஆபீஸில். த்ரிஷாவுக்கு இவ்வளவு மோசமான இமேஜ் சிதைவை வேறு எந்தப் படமும் கொடுத்ததில்லை. பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் சொந்த ரிஸ்க்.

    சூர்யகாந்தி

    சூர்யகாந்தி

    மேலே குறிப்பிட்டுள்ள படங்களெல்லாம் புதுசு. ஆனால் புத்தம் புது காப்பியாக வெளியாகியுள்ளது ஒரு பழைய க்ளாஸிக் படம். அது புரட்சித் தலைவி ஜெயலலிதா கலக்கிய சூர்யகாந்தி படம். முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, சோ இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார். இப்போது பார்த்தாலும் ஏற்கத்தக்க கதைக் களம். டிஜிட்டலில் வெளியிட்டுள்ளார்கள். பார்த்து ரசியுங்கள்.

    English summary
    Here are the list of Tamil movies releasing Today, 16th Sep 2016.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X