இந்த வார ரீலீஸ்... ரம்மி, நினைத்தது யாரோ உள்பட 5 படங்கள்
ரம்மி, நினைத்தது யாரோ, இங்க என்ன சொல்லுது உள்பட 5 புதிய தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.
இவற்றில் ரம்மி தவிர மற்றவை கிட்டத்தட்ட புதுமுகங்கள் நடித்தவையே.

ரம்மி
விஜய் சேதுபதி - காயத்ரி, இனிகோ பிரபாகரன் நடிப்பில், பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரம்மி. இந்த வார படங்களில் கொஞ்சம் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக ரம்மி உள்ளது.

இங்க என்ன சொல்லுது
விடிவி கணேஷ் நடித்து தயாரித்துள்ள படம் இங்க என்ன சொல்லுது. மீரா ஜாஸ்மின் ஹீரோயின். சிம்பு, ஆன்ட்ரியா கவுரவே வேடத்தில் வருகிறார்கள். படம் நேற்றே வெளியாகிவிட்டது.

நினைத்தது யாரோ
ஒரு காலத்தில் வெள்ளி விழாப் படங்களாகத் தந்த விக்ரமன், பெரிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம். புதுமுகங்களைத்தான் இம்முறையும் நம்பி களமிறங்கியுள்ளார்.

நினைவில் நின்றவள்
எஸ்வி சேகர் தன் மகன் அஸ்வினை வைத்து எடுத்துள்ள படம். ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்தது. இத்துடன் எதிர்வீச்சு என்ற படமும் இன்று வெளியாகியுள்ளது.

ரம்மிக்கு மட்டும் 200
இவற்றில் ரம்மி படத்துக்கு மட்டும் 200 தியேட்டர்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்றவற்றுக்கு அதிகபட்சம் 50 முதல் 100 அரங்குகள் வரைதான்.

கோலி சோடாவுக்கு கூடுதல் அரங்குகள்
கடந்த வாரம் வெளியான கோலி சோடா படத்துக்கு இந்த வாரம் கூடுதலாக அரங்குகள் ஒதுக்கப்பட்டு வருவது படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications











