வெள்ளிக்கிழமை... கோச்சடையானுக்கான அரங்குகளில் வெளியாகும் படங்கள் இவை!
சென்னை: கோச்சடையான் படம் தள்ளிப் போனதால், அந்தப் படத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட அரங்குகளில் மூன்று நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
யாமிருக்க பயமே, அங்குசம் மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகியவைதான் அந்த மூன்று படங்கள்.

யாமிருக்க பயமே
கிருஷ்ணா, ஓவியா நடித்துள்ள படம் யாருமிருக்க பயமே. எல்ரெட் குமார் தயாரிக்க, டீகே இயக்கியுள்ளார். கோச்சடையான் வெளியீடு தள்ளிப் போனது தெரிந்ததுமே, சட்டென்று இந்தப் படத்தை ரிலீஸுக்கு கொண்டு வந்தார் எல்ரெட்குமார்.

அங்குசம்
ஸ்கந்தா - ஜெயந்தி குஹா நடிப்பில், மனுகண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் அங்குசம். முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். தியேட்டர்கள் பிரச்சினையால் இப்போது வெளியாகிறது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும், கோச்சடையான் தாமதத்தால், முன்கூட்டியே வெளியாகிறது. ஆனால் இந்தப் படம் இன்றல்ல.. நாளை 10ம் தேதிதான் திரையைத் தொடுகிறது.

மில்லியன் டாலர் ஆம்
இன்று வெளியாகும் ஹாலிவுட் படம் மில்லியன் டாலர் ஆம். இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் ஒரு தமிழ்ப் பாடலையும் புகுத்தியுள்ளார் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











