இன்றைய ரிலீஸ்... ஜீவா, மெட்ராஸ், தலக்கோணம்!
இன்று வெள்ளிக்கிழமை இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன. ஒன்று ஆர்யா தயாரித்துள்ள ஜீவா, இன்னொன்று ஞானவேல்ராஜாவின் மெட்ராஸ்.
தலக்கோணம் என்ற படமும் இன்று வெளியாகிறது.

மெட்ராஸ்
கார்த்தி - கேதரின் நடித்துள்ள படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தை கார்த்தி ரொம்பவே நம்பியிருக்கிறார். காரணம், தொடர்ந்து வந்த சில தோல்விப் படங்கள்.

ஜீவா
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜீவா. இந்தப் படத்தை நான்கு நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ஆர்யாவின் தி ஷோ பீப்பிள், விஷால் பிலிம் பேக்டரி, தி நெக்ஸ்ட் பிக் பிலிம், வெண்ணிலா கபடி டீம் புரொடக்ஷன்ஸ் என நான்கு நிறுவனங்கள் இணைந்துள்ளன.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தலக்கோணம்
கே. பத்மராஜ் இயக்கத்தில், சுபாஷ் ஜவஹர் இசையமைப்பில் ஜிதேஷ், ரியா நடித்துள்ள படம் இது.

அடுத்தவாரம்..
அடுத்த வாரம் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது யான்.


Click it and Unblock the Notifications











