இன்றைய ரிலீஸ்- நேரம் உள்பட 4 படங்கள்!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியீடான நேரம் உள்பட நான்கு படங்கள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.
கோடையின் உச்சகட்டம் இந்த மே மாதம்தான். பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கான நேரம் இது. ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை.
இந்த மே மாதத்தில் அமைதிப்படை 2 மட்டுமே பெரிய படமாக வெளியானது.
இன்று வெள்ளிக்கிழமை நான்கு படங்கள் வெளியாகின்றன.

நேரம்
இவற்றில் ஓரளவு பெரிய பப்ளிசிட்டியோடு வரும் படம் நேரம். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இதனாலேயே ஒரு எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. த்ரில்லர் - காமெடிப் படமான இதில் நிவின் பாலி, நசிரியா நஸீம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ளார்.

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
சினிமாவுக்கு பாட்டெழுத வந்த தபு ஷங்கர், இயக்கியுள்ள படம் வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய். டி.இமான் இசை. குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் நடித்த ராமகிருஷ்ணன் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

மாடப்புரம்
பூவி புரொடக்ஷன் சார்பில் ஏ. கார்த்தி தயாரித்துள்ள படம் மாடப்புரம். இதில் நாயகனாக சிவக்குமார், நாயகியாக ஷில்பா பார்வதி நடித்துள்ளனர். வில்லனாக சரேஷ் மற்றும் முத்துக் குமார் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பிரவின் இயக்குகிறார்.

கண்ணுக்கு இமை ஆனாள்
இந்தப் படங்கள் தவிர, கண்ணுக்கு இமை ஆனாள் என்ற படமும் வெளியாகிறது. டப்பிங் படங்களாக மகேஷ்பாபுவின் வெற்றி வீரன், ருத்ரதேவி போன்றவையும் வெளியாகின்றன.

தி கிரேட் கட்ஸ்பி
எபிக் 3 டி, தி ரிலக்டன்ட் பன்டமென்டலிஸ்ட், தி கிரேட் கட்ஸ்பி ஆகிய மூன்று ஹாலிவுட் படங்களும் இன்று வெளியாகின்றன. தி கிரேட் கட்ஸ்பி படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டிலிருந்து வரும் முக்கிய படம் அவுரங்கசீப். அர்ஜூன் கபூர் நடித்துள்ளார். ஐ டோன்ட் லவ் யு என்ற இந்திப் படமும் சென்னையில் இன்று வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











