கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்பட இன்று நான்கு படங்கள் ரிலீஸ்!

By Shankar

கேடி பில்லா கில்லாடி ரங்கா, அழகன் அழகி உள்பட நான்கு புதிய படங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக வெளியாகின்றன.

அத்துடன் ப்ரூஸ் வில்லிஸ் நடித்துள்ள பிரமாண்ட ஆங்கிலப் படமும் இன்று வெளியாகிறது.

இன்றைய படங்கள் குறித்து ஒரு பார்வை...

கேடி பில்லா கில்லாடி ரங்கா

கேடி பில்லா கில்லாடி ரங்கா

மெரினாவுக்குப் பிறகு பாண்டிராஜ் தயாரித்து இயக்கியுள்ள படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. விமல், சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப் படத்தில் ஹீரோயின்களாக பிந்து மாதவியும் ராகினியும் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா வெளியிடுகிறார்.

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் ஒரு நாள்

ராதிகா சரத்குமார் தயாரித்துள்ள படம் இது. மலையாளத்தில் வெளியான ட்ராபிக்கின் ரீமேக். சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், பிரசன்னா, ராதிகா, இனியா, பார்வதி மேனன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஷஹீத் காதர் இயக்கியுள்ளார்.

அழகன் அழகி

அழகன் அழகி

நந்தா பெரியசாமி இயக்கத்தில், 34 புதுமுகங்கள் அறிமுகமாகும் படம் இந்த அழகன் அழகி. ஜேக் - ஆருஷி ஹீரோ ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஜிஎம் குமார், ரவிமரியா மற்றும் ஏ வெங்கடேஷ்தான் தெரிந்த முகங்கள்.

கீரிப்புள்ள

கீரிப்புள்ள

சாட்டை படத்தில் நடித்த யுவன் ஹீரோவாகவும் திஷா பாண்டே நாயகியாகவும் நடித்துள்ள படம் இந்த கீரிப்புள்ள. படம் வெளியாகும் முன்பே இதன் திருட்டு விசிடி வெளியாகிவிட்டது. பெரோஷ்கான் இயக்கியுள்ளார்.

தமன்னாவின் இந்திப் படம்

தமன்னாவின் இந்திப் படம்

தமன்னா முதல் முறையாக நடித்துள்ள இந்திப் படமான ஹிம்மத்வாலாவும் இன்றுதான் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 14 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் இந்தப் படத்தின் ஹீரோ.

ஈஸ்டர் ஸ்பெஷல்

ஈஸ்டர் ஸ்பெஷல்

ஈஸ்டர் ஸ்பெஷலாக உலகெங்கும் வெளியாகியுள்ள ப்ரூஸ் வில்லிசின் G.I. Joe: Retaliation படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்று பெரிய அளவில் தமிழகத்தில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் இந்தப் படத்துக்கு 22 அரங்குகள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X