அட ஜெய்சங்கர் காலத்துலயே அந்த ஐட்டம் இருந்துச்சா?.. 2கே கிட்ஸை ஷாக் ஆக்கும் சூப்பர் வீடியோ!

சென்னை: அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தாக்கம் நம்ம ஊரில் ஜெய்சங்கர் படங்களில் தான் அதிகம் இருக்கும். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றே அவரை எல்லாரும் அழைத்தனர். அந்த காலத்தில் ஹோட்டல்கள் என காட்டப்படும் காட்சிகள் எல்லாம் இப்போ கூட அப்படியான கலர் கலர் லைட்ஸ் போட்டுக் கொண்டு பிரம்மாண்ட செட்டுடன் அமைந்திருக்கும் ஹோட்டல்களை காண முடியவில்லையே என்கிற ஏக்கத்தையே அந்த படங்கள் உருவாக்கி இருக்கும்.

ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான துணிவே துணை படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தற்போது அந்த ஒரு ஐட்டத்திற்காகவே தற்போது தீயாக பரவி வருகிறது. அது என்ன ஐட்டம் என்பதை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

Fried Rice food presented in Jai Shankars 1976 release Thunive Thunai movie stuns fans


இந்தியன் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர்: இப்போ இந்த காலத்துல இந்த படங்கள் எல்லாம் எடுத்திருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே இந்த ஹாலிவுட் படத்தில் இருந்து தான் சுட்டு விட்டார்கள் என்றும் அட்லீ என்றும் கலாய்க்க ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், அந்த காலத்தில் தொடர்ச்சியாக ஜெய்சங்கர் பல ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாதிப்புகளில் இயக்குநர்கள் உருவாக்கிய படங்களிலேயே நடித்து கோலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் என்றே ரசிகர்களால் தாராளமாக கொண்டாடப்பட்டார்.

துணிவே துணை: 1976ம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் உருவான வெற்றிப் படம் தான் துணிவே துணை. அந்த படத்தில் சிஐடி விஜயகுமாராக நடிகர் விஜயகுமார் பொன்வேல் எனும் கிராமத்தில் ஒரு மர்ம கொலை பற்றி விசாரிக்க சென்றிருப்பார். ஆனால், அவர் படுகொலை செய்யப்பட, தனது அண்ணனின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டு பிடிக்க வேண்டும் என அவரது தம்பி சிஐடி ஆனந்தாக ஜெய்சங்கர் அந்த கிராமத்துக்கு சென்று வில்லன் அசோகனின் அட்டகாசத்தை ஒடுக்குவதே இந்த படத்தின் கதை.

அப்பவே அந்த ஐட்டம்: அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பல 2கே கிட்ஸ்களும் அப்பவே அந்த ஐட்டம் ஹோட்டல்களில் இருந்ததா? என வாய் பிளந்து பார்த்து அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். வில்லனுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட வரும் ஜெய்சங்கர் ஹோட்டலில் என்ன இருக்கு என கேட்க, பூரி, சப்பாத்தி, தோசை, ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், சிக்கன் குருமா இருக்கு என வெயிட்டர் சொல்லும் காட்சியை தான் ரசிகர்கள் ஆச்சர்யமாக ஷேர் செய்து வருகின்றனர்.


ஃபிரைட் ரைஸ்: சைனீஸ் உணவுகள் என அழைக்கப்படும் ஃபிரைட் ரைஸ், நூடூல்ஸ் எல்லாம் 1976ம் ஆண்டே வந்துடுச்சா என ரசிகர்கள் ஆர்வத்துடன் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவுக்கு ஹாலிவுட்டில் இருந்து கவ் பாய், சிஐடி உள்ளிட்ட பல விஷயங்களை அப்பவே ஜெய்சங்கர் இறக்குமதி செய்த வரிசையில் இந்த ஃபிரைட் ரைஸையும் வசனமாக இறக்குமதி செய்து விட்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால், 2000ம் ஆண்டுக்கு மேல் தான் தமிழ்நாட்டில் ஃபிரைட் கலாச்சாரம் அதிகமாக ஹோட்டல்களில் தென்பட்டது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வில்லன் நடிகர் நூடுல்ஸை நியூடுல்ஸ் என ஸ்டைலாக சொல்வதையும் ரசிகர்கள் நோட் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X