லைக் போடுற பிரெண்ட் இல்ல.. லைஃப் கொடுக்குற பிரெண்ட்.. டிரெண்டாகும் சீறு வசனம்!

Recommended Video

Seeru Success Party | Jiiva |Riya Suman | D.imman | Rathna Siva | Vels Film International

சென்னை: ஃபேஸ்புக்குல லைக் போடுற பிரெண்ட் இல்ல, லைஃப் கொடுக்குற பிரெண்ட் சீறு படத்தின் வெற்றியை தீர்மானித்த வசனம்.

கடந்த வாரம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்துள்ள படம் தான் சீறு. ஜீவா ,ரியா சுமன்,காயத்ரி கிருஷ்ணா,நவ்தீப்,வருண்,சதீஷ் மற்றும் சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தயாரித்து இருந்தார். டி.இமான் படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

Friend is the story of Seeru

நடிகர் ஜீவாவிற்கு சிறந்த வெற்றிபடமாக அமைந்திருக்கிறது இந்த சீறு படம் . ஜீவா இதுவரையில் நடிக்காத தங்கை சென்டிமென்ட் மற்றும் நட்பு பற்றிய காட்சிகளில் இந்த படத்தில் நடித்து இருந்தார் .

இந்த படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும்,ஃபேஸ்புக்குல லைக் போடுற பிரெண்ட் இல்ல லைப் கொடுக்குற பிரெண்ட் என்று. இந்த ஒரு வசனம் தான் படத்தின் கதையை தீர்மானித்து இருக்கிறது .

படத்தின் திரைக்கதையும் இதன் அடிப்படையிலே உருவாக்கபட்டிருக்கிறது . படத்தின் ஆரம்பத்தில் நாயகன் ஜீவாவை கொல்ல வரும் வருண் அவர் தங்கையின் உயிரை காப்பாற்றுகிறார். மேலும் இதன்பின் தான் கதை தடம்புரண்டு மாறுகிறது .

Friend is the story of Seeru

அதுவரை வருணை தான் ரசிகர்கள் வில்லனாக பார்த்து வந்தனர். அதன்பின் தனக்கு உதவி செய்த வருணுக்கு உதவி செய்ய தயாராகுகிறார் ஜீவா . அங்கிருந்து கதை எப்படி சென்றது ஜீவா செய்த உதவி அவருக்கு உதவியதா என்பது தான் கதை .

தற்போது நண்பர்கள் பலர் எப்படியிருக்கிறார்கள், ஆனால் எப்படியிருக்க வேண்டும் என்பதை படம் போன வேகத்திலே பேசி செல்கிறது. சில அழுத்தமான வசனங்கள் நட்பை பற்றிய காட்சிகளை மிக ஆழமாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்து இருக்கிறது .

ஜீவா அடுத்ததாக களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த்தாக நடித்து இருக்கிறார். 1983ல் எவ்வாறு இந்திய அணி உலககோப்பையை வென்றது எனும் வரலாற்றை படமாக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X