முதலில் தலைப்பை சொந்தமா வைங்க, அப்புறமா என்ன விமர்சிக்கலாம்: சக இயக்குனருக்கு 'வி.பி.' பதில்
சென்னை: முதலில் தலைப்பை சொந்தமாக வைங்க என்று இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ரெண்டாவது படத்திலும் சிவா தான் ஹீரோ.
இந்நிலையில் சிவா, அமுதன், இயக்குனர் வெங்கட் பிரபு இடையே ட்விட்டரில் நடந்த உரையாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமுதன்
அமுதன் சார் உங்களை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. நாள் முழுக்க பயிற்சி. ராபர்ட் லீ கூட டயர்டாக உள்ளார். நாளைக்கு லீவு எடுத்துக் கொள்ளலாமா என்று சிவா ட்வீட்டினார்.
லொகேஷன்
பல்கேரியாவில் காட்டுக்குள் லொகேஷன் தேடிக் கொண்டிருந்தோம் சிவா. சிக்னல் இல்லை. ஒர்க்ஷாப்பை தொடரவும்.. நான் ராபர்ட்டிடம் பேசுகிறேன் என்று பதில் அளித்தார் அமுதன்.
சில்லி
சிவாவுக்கு பிரேக் கொடுங்க என்று டான்ஸ் மாஸ்டர் கல்யாண் பரிந்துரைக்க அமுதன் கூறியதாவது, ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இது பார்ட்டி மாதிரி சில்லி படம் கிடையாது. நான் வெங்கட் பிரபு போன்று இல்லை. சீரியஸான இயக்குனர் என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு
தன்னை கலாய்த்து அமுதன் போட்ட ட்வீட்டை பார்த்த வெங்கட் பிரபு, முதலில் தலைப்பை சொந்தமா வைங்க என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











