twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: கட்சி தொடங்கப் போறேன்.. நேசமணிய அடிச்ச சுத்தியல் தான் என் சின்னம்: ரமேஷ்கண்ணா கலகல பேட்டி

    நேசமணி விவகாரம் உலகளவில் டிரண்டிங்கானது பற்றி ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் நடிகர் ரமேஷ்கண்ணா.

    |

    சென்னை: நேசமணி மூலம் கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து கட்சித் தொடங்கப் போகிறேன். சுத்தியல் தான் என்னுடைய சின்னம் என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார் நடிகர் ரமேஷ் கண்ணா.

    கடந்த வாரம் உலகமே நேசமணிக்காக பிரார்த்தனை செய்தது நாமறிந்த விசயம்தான். யாரோ எங்கேயோ விளையாட்டாக கொளுத்திப் போட்ட விவகாரம், சீரியசாகி டிரெண்டிங்கானது. ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரப் பேர் தான் நேசமணி என்பது தெரியாத, அயல் மாநிலத்தவர்கள் கூட நேசமணிக்காக உருக்கமாகப் பிரார்த்திக் கொண்டார்கள்.

    இப்படியாக நேசமணி பிரபலமாக காரணமானவர்களில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி. காரணம் அவர் தான் நேசமணி தலையில் சுத்தியலைப் போட்டவர். சரி, இந்த விவகாரத்தில் அவர் எப்படி பீல் பண்ணுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள 'கிருஷ்ணமூர்த்தி' ரமேஷ்கண்ணாவை சந்தித்தோம்.

    படத்தில் பார்ப்பது போல், நிஜத்திலும் கலகலவென சிரித்தபடி தான் பேசுகிறார் ரமேஷ்கண்ணா..

    ரொம்ப மகிழ்ச்சி:

    ரொம்ப மகிழ்ச்சி:

    "நேசமணி விவகாரத்தால் உலக அளவில் பேமசாகி விட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் நிறைய மெசேஜ்கள் நேசமணி பற்றி வருகிறது. சிலர் சீரியசாவே இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா சொல்லுங்கள் உதவுகிறோம் என அக்கறையாகக் கேட்குறாங்க.

    சுத்தியல் சின்னம்:

    சுத்தியல் சின்னம்:

    நேசமணி மூலம் கிடைத்த இந்த பப்ளிசிட்டியை வைத்து அடுத்தாண்டு அரசியலில் குதிக்க இருக்கிறேன். புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன். எனது சின்னம் சுத்தியல் தான். யாராவது ஓட்டுப் போடவில்லை என்றால் சுத்தியலால் தலையிலேயே நச் என்று அடிப்பேன். ஜாக்கிரதை" என செல்லமாக மிரட்டுகிறார்.

    பதறிப் போன சித்திக்:

    பதறிப் போன சித்திக்:

    மேலும், "நேசமணி பேமஸ் ஆனது பற்றி ப்ரண்ட்ஸ் பட இயக்குநர் சித்திக்கிற்க்கு நான் தான் போனில் கூறினேன். ‘சார் நேசமணிக்கு பலமா அடிபட்டுடுச்சு.. ஹாஸ்பிடல்ல சீரியசா இருக்கார். உங்களத் தேடித்தான் தமிழக போலீஸ் வரப் போகுது' என்றேன். அவர் ஒண்ணும் புரியாமல் பதறிப் போய் என்னாச்சு? யார் நேசமணி?எனக் கேட்டார். பின்னர் நான் விளக்கமாகக் கூறியதும் தான் ரிலாக்ஸ் ஆனார்.

    பெரிய விசயம்:

    கனவு மாதிரி இருக்கிறது. சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இப்படி எங்கள் நேசமணி காமெடி மீண்டும் பிரபலமாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே இது பெரிய விசயம் தான். மீண்டும் நேசமணி, கிருஷ்ணமூர்த்தி போன்ற காமெடி கதாபாத்திரங்களை இயக்குநர்கள் உருவாக்க வேண்டும்" என சிரித்தபடியே தனது பேட்டியை முடித்துக் கொண்டார் ரமேஷ்கண்ணா.

    English summary
    While speaking to Oneindia, Actor Ramesh Kanna said that he will soon start a political party and his symbol will be Hammer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X