இப்படி செய்யுங்கள் ஜேசன் சஞ்சய்.. விஜய் மகனுக்கு குவியும் அட்வைஸ்.. என்ன செய்யப்போறாரோ?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா என்ற படத்தை இயக்கிவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. இப்படம் வெற்றி பெற்று விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரியே திரைத்துறையில் பெரிய இடத்துக்கு செல்வார் என்று ரசிகர்கள் ஆரூடம் கூறிவரும் சூழலில்; அவருக்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் செய்துவருவதாக கூறப்படுகிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தை போன்று நடிப்பில் கலக்குவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் தனது தாத்தாவின் வழியை தேர்ந்தெடுத்து இயக்குநராக மாறியிருக்கிறார். வெளிநாட்டில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்திருக்கும அவர்; படித்துக்கொண்டிருக்கும்போதே சில குறும்படங்களை இயக்கி பாராட்டை பெற்றதாகவும்; அந்தத் தெம்பில்தான் இயக்குநராகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பலருக்கும் ஆச்சரியம்: லைகா தயாரிப்பில் ஜேசன் தனது முதல் படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானபோது பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏனெனில் லைகா போன்ற பெரிய நிறுவனம் எப்படி முன் அனுபவம் இல்லாத அதிலும் வயது ரொம்பவே குறைந்தவரை நம்பி பணத்தை கொட்டுகிறது என்ற ஆச்சரியம்தான் அது. ஆனால் அதற்கு பின்னணியில் சங்கீதாவும், அவரது தந்தையும் இருப்பதாக சொல்கிறார்கள்.

Friends Advise Vijay Son Jason Sanjay to Take New Directing and Acting Offers Before Release
Photo Credit:

சந்தீப் கிஷன் ஹீரோ: ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வந்தாலும்; யார் ஹீரோவாக நடிக்கிறார்; படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் யார் என்பது பல மாதங்களுக்கு தெரியாமலேயே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜேசன் சொன்ன கதை பிடித்துப்போக சந்தீப் கிஷன் ஹீரோவாகவும், தமன் இசையமைப்பாளராகவும் உள்ளே வந்தார்கள். இவர்கள் தவிர்த்து தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

படத்தின் டைட்டில் சிக்மா: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானாலும் பெயரை வெளியிடாமல் இருந்தது படக்குழு. ஒருவழியாக படத்துக்கு சிக்மா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் படத்தின் பெயரை வெளியிட்டார்கள். டைட்டிலே வித்தியாசமாக இருப்பதால் படமும் அப்படி இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். இந்நிலையில் ஜேசன் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது ஜேசன் சஞ்சய்யின் நெருங்கிய நண்பர்கள் சிலர்; இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே இன்னொரு படத்தை இயக்குவதற்கு கமிட் ஆக வேண்டும் என்றும்; இயக்கத்தில் மட்டுமின்றி ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்தால் அதனையும் தவறவிட வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் ஜேசன் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஜேசனுக்கு ஆஃபர்: அதுமட்டுமின்றி நடிகராக மட்டும் ஆகக்கூடாது; இயக்கத்திலேயே முழு கவனத்தையும் செலுத்துவதில்தான் அவரது விருப்பம் இருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே இயக்குநர்கள் சுதா கொங்கரா, அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோர் ஏற்கனவே ஜேசன் சஞ்சய்யை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X