அடப்பாவமே! ஃப்ரண்ட்ஸ் சீரிஸின் மேத்யூ பெரி இறக்கும்போது அவர் வங்கிக்கணக்கில் இருந்தது இவ்வளவுதானா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு சில படங்களோ, தொலைகாட்சி சீரிஸ்களோ அல்லது வெப் சீரிஸ்களோ நமது வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். இல்லையென்றால் ஒருசில கதாபாத்திரங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானதாக போய்விடும். இப்படியானவற்றில் உலகப்புகழ் பெற்ற சீரிஸ் என்றால் அதில் அதில் கட்டாயம் ஃப்ரெண்ட்ஸ் டீவி சீரிஸ் இருக்கும். இந்த சீரிஸைப் பார்த்த அனைவரும் அந்த சீரிஸை தனது நண்பர்கள் குழுவுடன் பொருத்திப் பார்த்து மகிழ்ந்தவர்கள் ஏராளாம்.
1994ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில் இதுவரை மொத்தம் 10 சீசன்கள் வந்துள்ளது. இதில் மொத்தம் 236 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த 236 எபிசோட்களையும் பலமுறை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். இந்த சீரிஸில் உள்ள கதாபாத்திரங்களில் பெரும்பான்மையான ரசிகர்களால் விரும்பப்பட்ட கதாபாத்திரம் என்றால், அது சாண்ட்லர் பிங். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மேத்யூவ் பெரி. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.

மறைவு: இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் உள்ள தொட்டியில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்தார். முதலில் இவரது சடலத்தைப் பார்த்த வீட்டு பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேத்யூவ் பெர்ரியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சடலம் எடுக்கப்பட்ட இடத்தில் போதைப்பொருள் எதாவது இருக்கின்றதா எனவும், வீட்டில் சந்தேகிக்கும் படியாக எதாவது நடைபெற்றுள்ளதா எனவும் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையான மரணமா எனவும் பல கோணங்களில் விசாரித்தனர்.
ரசிகர்கள் அதிர்ச்சி: மேத்யூ பெரியின் மறைவுச் செய்தி வெளியானதும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஃபிரண்ட்ஸ் சீரிஸை தயாரித்த வர்னர் ப்ரோஸ் நிறுவனத்தினர் மிகவும் அதிர்ச்சியான வருத்தத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். உலகம் முழுவதும் உள்ள மேத்யூ பெர்ரியின் ரசிகர்கள் அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொண்டனர். ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள ஃபாரஸ்ட் லான் கல்லறையில் மேத்யூவ் பெர்ரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஃப்ரண்ட்ஸ் சீரிஸில் அவருடன் நடித்த நடிகர்களான ஜெனிஃபர் அனிஸ்டன், கோர்ட்டனி காக்ஸ், லிசா குட்ரோ, டேவிட் ஸ்விம்மர், மாட் லெப்லாங்க் மற்றும் பிற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
வங்கிக் கணக்கு: மறைந்த மேத்யூ பெரியின் வங்கிக் கணக்கில் வெறும் 1.50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே இருக்கின்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 12 கோடிகள் மட்டுமே. இந்த பணத்தை மட்டுமே அவரது பெற்றோர்களுக்கு பிரித்துக் கொடுக்கவுள்ளனர். இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடிப்பில் சம்பாதித்த பணத்தை எல்லாம் என்ன செய்தார் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
மீதி சொத்துகள்: ஆனால் உண்மை என்னவென்றால் "ஆல்வி சிங்கர் லிவிங் டிரஸ்ட்க்கு தனது சொத்துக்களை கொடுத்துவிட வேண்டும் என உயிலில் எழுதியுள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் மேத்யூ பெரி வங்கிக் கணக்கில் உள்ள பணம் அவரது பெற்றோர்களுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரிக்கும் பிரித்துக் கொடுக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











