Friends star Mathew Perry: ஸ்ரீதேவியை போல பாத்ரூமில் உயிரை விட்ட ’ஃப்ரெண்ட்ஸ்’ நடிகர் மேத்யூ பெர்ரி
லாஸ் ஏஞ்சல்ஸ்: Friends star Mathew Perry death news in Tamil - உலகளவில் பிரபலமான ஃப்ரெண்ட்ஸ் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் மேத்யூ பெர்ரி பாத் டப்பில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

54 வயதான ஃப்ரெண்ட்ஸ் சீரியல் நடிகர் மேத்யூ பெர்ரி பாத் டப்பில் சடலமாக கிடந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃப்ரெண்ட்ஸ் தொடர்: அமெரிக்க ரசிகர்களை மட்டுமின்றி உலகளவில் பல ரசிகர்களையும் கவர்ந்த பிரபல டிவி தொடர் தான் ஃப்ரெண்ட்ஸ். அதில், 1994 ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 10 சீசன்களாக வெளியான ஃப்ரெண்ட்ஸ் சீரியலில் சாண்ட்லர் பிங் எனும் லீடு ரோலில் நடித்து லட்சக் கணக்கான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக திகழ்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாத் டப்பில் மரணம்: லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் உள்ள பாத் டப்பில் மேத்யூ பெர்ரி உயிரிழந்த நிலையில், கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மேத்யூ பெர்ரி உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
போதைப் பொருள் இல்லை: ஃப்ரெண்ட்ஸ் சீசன் 3 ஷூட்டிங்கின் போது நடந்த எதுவுமே தனக்கு ஞாபகத்தில் இல்லை என்றும் அந்த அளவுக்கு தான் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தேன் என்றும் ஓபனாக பேட்டியளித்துள்ளார். ஆனால், அவர் உயிரிழந்த போது போதைப் பொருள் இருந்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என கூறியுள்ளனர்.
ஸ்ரீதேவியை போல: நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் குடும்பத்துடன் சென்ற போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிப்பட்டு உயிரிழந்ததை போலவே 54 வயதான மேத்யூ பெர்ரியும் பாத்ரூம் டப்பில் குளித்துக் கொண்டிருக்கும் போது மயங்கிய நிலையில், மூழ்கி இறந்து விட்டாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை அவரது ரசிகர்கள் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் #MatthewPerry என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











