ஆபீஸ்ல நண்பர்கள்.. செம்பருத்தியில் சண்டைக்காரர்கள்.. சீரியல் எபக்ட்!
Recommended Video

சென்னை: விஜய் டிவியின் ஆஃபீஸ் சீரியலில் நண்பர்களாக நடித்த கார்த்திக் ராஜூம் விஷ்ணுவும், ஜீ தமிழில் வெவ்வேறு சீரியல்களின் நாயகர்கள் ஆனான் மூலம் போட்டியாளர்கள் ஆகியிருக்கின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதன் நாயகன் கார்த்திக் ராஜூம் அப்படித்தான். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஆஃபீஸ் சீரியல் மூலம் பிரபலமானவர்.

சீரியல் என்றாலே சன் டிவி தான் என்றிருந்த பல ஆண்டு கால வரலாற்றை உடைத்து டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது செம்பருத்தி. பிரம்மாண்டமான உருவாக்கம், நாயகன் நாயகி க்கென இருக்கும் ரசிகர் பட்டாளம் ஆகியவையே இந்த சீரியலின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம். அதிலும் குறிப்பாக கார்த்திக்கிற்கு பெண் ரசிகைகள் அதிகம்.

சன் டிவியின் போட்டி ஒருபுறமிருக்க, கார்த்திக்கின் நண்பர் விஷ்ணு இப்போது "சத்யா" சீரியலில் நாயகன் ஆகி கார்த்திக்கிற்கு போட்டியாளர் ஆகி இருக்கிறார். ஆஃபீஸ் சீரியலில் கார்த்திக் - ராஜி ஜோடி போன்றே விஷ்ணு - லட்சுமி ஜோடிக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ஒரே சீரியல் மூலம் இருவருக்கும் உருவான ரசிகர்களை இப்போது தனித்தனி சீரியல் மூலம் தன் பக்கம் இழுத்துள்ளது ஜீ தமிழ் டிவி. செம்பருத்தி தொடர் ப்ரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக, சத்யா இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











