கடவுள் இருக்கான் குமாரு: ஆர்யா திருமணம் பற்றி விக்ராந்த் ட்வீட்
சென்னை: ஆர்யாவுக்கு திருமணம் நடப்பது குறித்து கடவுள் இருக்கிறார் நண்பா என்று தெரிவித்துள்ளார் விக்ராந்த்.
நடிகை சயீஷாவை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்யப் போவதாக நடிகர் ஆர்யா காதலர் தினமான இன்று அறிவித்துள்ளார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் அவரை வாழ்த்தியதுடன், கலாய்க்கவும் செய்துள்ளனர்.
அப்படி அவர்கள் கலாய்த்து போட்ட ட்வீட்டுகளை சேகரித்து கொடுத்துள்ளோம்.
விஷ்ணு விஷால்
நான் கணித்தது போன்று முதல் ஆடு விஷாலை அடுத்து இரண்டாவது ஆடு ரெடி ஆயிருச்சு, என்ன விக்ராந்த் என்று நடிகர் விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பி ட்வீட் செய்தார்.
விக்ராந்த்
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த விக்ராந்தோ, கடவுள் இருக்கிறார் நண்பா என்று பதில் அளித்துள்ளார்.
ராணா
ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ராணா அவர் சிங்கிளாக கொண்டாடும் கடைசி காதலர் தினம் இது என்பதை நினைவூட்டி கடுப்பேற்றியுள்ளார்.
கவலை
பிரபலங்கள் ஆர்யாவை வாழ்த்த, நெட்டிசன்களோ எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை நினைத்து வருத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











