உன் காதலன் சரியில்லை, ஜாக்கிரதை: ப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்
Recommended Video

மும்பை:நிக் ஜோனஸிடம் கொஞ்சம் தள்ளியே இரு என்று நடிகை ப்ரியங்கா சோப்ராவை அவரது தோழிகள் எச்சரித்துள்ளார்களாம்.
ஹாலிவுட், பாலிவுட் என்று படுபிசியாக இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. நியூயார்க் நகரில் பிரமாண்ட வீடு வாங்கியுள்ளார். இந்நிலையில் மும்பையில் ரூ. 100 கோடிக்கு வீடு வாங்கி அண்மையில் குடியேறினார்.
ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸை காதலிப்பது பற்றி தான் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோனஸ்
கடந்த ஆண்டு நடந்த மெட் காலா நிகழ்ச்சிக்கு ப்ரியங்காவும், நிக்கும் ஜோடி போட்டு வந்தபோது தான் அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கத் துவங்கினார்கள். தற்போது அவர்கள் கை கோர்த்துக் கொண்டு ஜோடியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ப்ரியங்கா ரூ. 100 கோடி வீட்டில் குடியேறியபோது நிக் ஜோனஸ் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திருந்தார்.

ஹாலிவுடே
ப்ரியங்கா சோப்ரா நிக் ஜோனஸுடன் சேர்ந்து கோவாவுக்கு சென்றார். தனது குடும்பத்தாருக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். முன்னதாக நிக் ஜோனஸ் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். ப்ரியங்கா தனது 36வது பிறந்தநாளை நிக்குடன் சேர்ந்து இங்கிலாந்தில் கொண்டாடினார். இருவரும் காதலில் சீரியஸாக இருப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம்
நிக் ஜோனஸ் கையைப் பிடித்துக் கொண்டு ப்ரியங்கா ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ப்ரியங்காவின் காதல் அவரின் தோழிகளுக்கு பிடிக்கவில்லையாம். நிக் ஜோனஸ் சரியான ஆள் கிடையாது. உன் இதயத்தை காயப்படுத்திவிடுவார். அவரிடம் ஓவராக நெருங்கிப் பழகாதே. தள்ளியே இரு அது தான் உனக்கு நல்லது என்று ப்ரியங்காவை அவரது தோழிகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை
ப்ரியங்கா சோப்ராவுடன் செட்டில் ஆகும் எண்ணத்தில் உள்ளாராம் நிக் ஜோனஸ். ஆனால் தோழிகள் எச்சரித்ததை அடுத்து ப்ரியங்கா எச்சரிக்கையுடன் இருக்க முயன்று வருகிறாராம். நிக் செக்சியாகவும், திறமையானவராகவும் இருப்பதாகவும், மேலும் படுக்கையில் கெமிஸ்ட்ரி அருமையாக உள்ளதாகவும் நினைக்கிறார் ப்ரியங்கா என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











