Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இது நட்பு பரம்பரை.. கபிலன் மற்றும் டான்சிங் ரோஸுடன் வேம்புலி.. ரசிகர்கள் கேள்விக்கும் பதில்!
சென்னை: "இது பிரெண்ட்ஷிப் பரம்பரை" என நடிகர்கள் ஆர்யா மற்றும் ஷபீர் உடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நம்ம வேம்புலி நடிகர் ஜான் கோக்கன்.
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக மாறி உள்ளார் நடிகர் ஜான் கோக்கன்.
அந்த நடிகையை தொடர்ந்து.. இந்த நடிகர் செய்த சாதனை.. கொண்டாடும் ரசிகாஸ்!
தான் நடித்த பழைய படங்களின் சின்ன சின்ன ஸ்க்ரீன் ஷாட்களை எல்லாம் பதிவிட்டு ரசிகர்களுக்கு இத்தனை படங்களில் தான் நடித்துள்ளேன் என்பதை நினைவூட்டி வருகிறார்.

செம படம்
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் படம் செம படம் என பாராட்டி உள்ளனர்.

கபிலனாக ஆர்யா
ரங்கன் வாத்தியாரை மானசீக குருவாக ஏற்று பாக்ஸிங் மீது கொண்ட ஆர்வத்தால் பாக்சிங் போட்டிகளை பார்த்து வரும் கபிலன் தனது வாத்தியாரின் கெளரவம் குறையும் தருவாயில் அவருக்காக பாக்ஸிங் ஆடி சார்பட்டா பரம்பரையின் பெயரை காப்பாற்றும் ஹீரோவாக ஆர்யா நடித்து அசத்தி உள்ளார்.

ஹீரோவை மிஞ்சிய டான்சிங் ரோஸ்
ஒரு படத்தில் ஹீரோவை மிஞ்சிய கதாபாத்திரங்கள் இருந்தால் அது நிச்சயம் நல்ல படமாகத்தான் இருக்கும். சார்பட்டா பரம்பரை படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ஹீரோவை மிஞ்சும் அளவுக்கு இடம்பெற்றுள்ளன. ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஷபீர் கலக்கிவிட்டார்.

வில்லனா ஹீரோவா
சார்பட்டா பரம்பரை படத்தை பொறுத்தவரையில் கபிலனுக்கு வில்லன் வேம்புலி என்றாலும், அந்த கதாபாத்திரம் வில்லனாக இல்லாமல் அதுவும் ஒரு ஹீரோவாகவே தனித்து நிற்கிறது. இடியப்பா பரம்பரையின் சாம்பியன் பாக்சராக நடிகர் ஜான் கோக்கன் நடித்த நிலையில், நீண்ட நாட்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற அவரது கனவு ஒரு வழியாக நிறைவேறி உள்ளது.

பிரெண்ட்ஷிப் பரம்பரை
இந்நிலையில், நடிகர்கள் ஆர்யா, ஜான் கோக்கன் மற்றும் ஷபீர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வேம்புலி நடிகர் ஜான் கோக்கன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இது "பிரெண்ட்ஷிப் பரம்பரை" என கெத்தாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் கேள்விகளுக்கு
மேலும், சார்பட்டா பரம்பரை படம் குறித்த கேள்விகளை ரசிகர்கள் கேட்கலாம், அதற்கு பதில் அளிக்கிறேன் என ஒரு கேள்வி பதில் செஷனையும் நடத்தி இருக்கிறார் நம்ம வேம்புலி. மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கி உள்ளனர்.

கபிலன் கதாபாத்திரத்தில்
நீங்க கபிலனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீங்களா? என்கிற கேள்விக்கு நான் ஒரு சாதாரண நடிகன்.. எந்த கதாபாத்திரத்தை இயக்குநர் கொடுக்கிறாரோ அதில் நடிப்பேன் என அவையடக்கமாக பதில் அளித்துள்ளார். மூவரும் மலையாளிகள் எந்த மொழியில் பேசிக் கொள்வீர்கள் என்கிற கேள்விக்கு தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவோம் என டக்குன்னு பதில் அளித்துள்ளார் ஜான் கோக்கன்.

வளைத்து வளைத்து
நடிகர் ஜான் கோக்கன் தனது மனைவி பூஜா ராமசந்திரன் உடன் வளைத்து வளைத்து ஏகப்பட்ட போட்டோஷூட்களையும் நடத்தி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறார். சமீபத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் இவர்களின் போட்டோஷூட் தான் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.
-
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அதே 450 கோடி பட்ஜெட்... ஜெயம் ரவிக்கு பதிலாக சுந்தர் சி டிக் செய்த ஹீரோ... கரையேறுமா சங்கமித்ரா?