ரஜினிகாந்த் படத்துல “தென்பாண்டி சீமையிலே” பாட்டா?.. யுவன் எப்படி வந்து சிக்கியிருக்காரு பாருங்க!

சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் இளைஞர்களை கவரும் விதமாக உருவாகியுள்ளது இந்த படம். ஜோ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு செம படத்தை ரியோ ராஜ் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஹரிஷ் கல்யாணை வைத்து பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா ரியோ ராஜை வைத்து ஸ்வீட் ஹார்ட் படத்தை தயாரித்துள்ளார். அதன் காரணமாக மொட்டை மாடி பார்ட்டி, ஃப்ரைஸ் வித் பொட்டேட் என ஏகப்பட்ட டிரெண்டாகி வரும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

Fries with Potate Sameeha Mariam gets trolled for not knowing about Nayakan movie song

பொட்டேடோ ஃபேஸ் என சோஷியல் மீடியாவில் வைரலான சமீஹா மரியம் யுவன் சங்கர் ராஜாவை பேட்டி எடுக்கும் போது "தென்பாண்டி சீமையிலே" யாருடைய படம் என்பது கூட தெரியாமல் பேசியது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

தயாரிப்பாளரானா இப்படித்தான்: அர்ச்சனா கல்பாத்தி டிராகன் படத்தின் புரமோஷனுக்காக ஏகப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து அந்த படத்தை புரமோட் செய்தார். அதே போல தற்போது யுவன் சங்கர் ராஜா ஸ்வீட் ஹார்ட் படத்துக்கு தீவிரமான புரமோஷனில் ஈடுபட்டுள்ளார். படத்தில் நடித்த நடிகர்களும் நடிகைகளுமே புரமோஷனுக்கு வர மறுத்து வரும் காலத்தில் தயாரிப்பாளர்கள் தாராளமாக களமிறங்கி புரமோஷன் செய்து வருகின்றனர்.

தென்பாண்டி சீமையிலே: ஃப்ரைஸ் வித் பொட்டேட் யூடியூப் சேனலை நடத்தி வரும் சமீஹா மரியம் யுவன் சங்கர் ராஜாவை பேட்டி எடுத்த போது "தென்பாண்டி சீமையிலே" பாடல் குறித்த பேச்சுக்கள் கிளம்பின. அப்போது, இது என்ன படம் என யுவன் சங்கர் ராஜா சமீஹாவை கேள்விக்கேட்டு மடக்க அதெல்லாம் எனக்குத் தெரியாது. பாட்டைக் கேட்டு வெறும் வைப் பண்ண மட்டும் தான் தெரியும் என பதிலளித்தார்.

Fries with Potate Sameeha Mariam gets trolled for not knowing about Nayakan movie song

ரஜினிகாந்த் பாட்டா?: அவரை விட அவரது டீமில் உள்ள ஒருவர் தென்பாண்டி சீமையிலே பாடல் ரஜினிகாந்த் படத்தின் பாடல் என சொல்ல யுவன் சங்கர் ராஜாவே கடுப்பாகிவிட்டார். கமல்ஹாசனின் நாயகன் படத்தின் பாடல் என்பது கூட தெரியாமல் சமீஹா மரியம் பேட்டி எடுப்பது எல்லாம் வெட்கக் கேடு என நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி கொத்தனார்: முன்னதாக மொட்டை மாடி பார்ட்டியில் ரியோ ராஜ் உடன் கலந்துக் கொண்டார் யுவன் சங்கர் ராஜா. விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் இணைந்துக் கொண்டு தூத்துக்குடி கொத்தனார் எனும் ஆபாச வைரல் பாடலுக்கு லிரிக் எழுத வைத்து பாடல் உருவாக்குவது போன்று ஃபன் பண்ணதை எல்லாம் பார்த்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தலைவன் என்ன இப்படியெல்லாம் வந்து சிக்கியிருக்கிறாரே என்றும் புரமோஷனுக்கு அந்த ரியோவை மட்டும் தனியா அனுப்பினா என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர். செலிபிரிட்டி ஷோ இன்று மாலை திரையிடப்படுகிறது. நாளை வெளியாகவுள்ள ஸ்வீட் ஹார்ட் ரியோ ராஜுக்கு ஹிட் கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

FAQs
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் ஹீரோயின் யார்?

சரண்யா பொன்வண்ணன்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X