twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே ஒரு ‘ம்யூட்’ மட்டும் தான்.. ப்ளூசட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்தின் சட்டப்போராட்டம் வெற்றி!

    |

    சென்னை: விமர்சகர் ப்ளூசட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படத்திற்கு சட்டப்போராட்டத்தின் மூலம் வெற்றிக் கிடைத்துள்ளது.

    தணிக்கை குழு இந்த படத்தை வெளியிடவே கூடாது என தடை விதித்த நிலையில், ரிவிஷன் கமிட்டி 38 'கட்'கள் கொடுத்ததாக ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.

    ஆனால், அப்படி படம் வெளியானால் வீண் என நினைத்து சட்டப் போராட்டத்தை கையில் எடுத்த மாறனுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது.

    ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ்.. ஆன்டி இண்டியன் படம் பற்றி சொன்ன ப்ளூசட்டை மாறன்.. என்ன தெரியுமா?ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ்.. ஆன்டி இண்டியன் படம் பற்றி சொன்ன ப்ளூசட்டை மாறன்.. என்ன தெரியுமா?

    ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில்

    ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில்

    பிரபல விமர்சகராக விளங்கி வரும் ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இண்டியன் எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். மதம் மற்றும் சாதியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படமாக உருவாகி உள்ள இந்த ஆன்டி இண்டியன் படம் வெளிவரவே கூடாது என பலர் சதி செய்தனர் என்றும் ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.

    படத்திற்கே தடை

    படத்திற்கே தடை

    ஆன்டி இண்டியன் படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படத்தை வெளியிடவே கூடாது என 'கட்'கள் கொடுக்காமல் ஒட்டுமொத்தமாக தடை செய்வதாக அறிவித்து விட்டனர். அதன் பின்னர் ரிவிஷன் கமிட்டிக்கு படத்தை போட்டுக் காட்டிய பிறகு 38 கட்கள் அதை பிரித்தால் 200 காட்சிகள் காலியாகும் நிலை ஏற்பட்டதால் சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள படக்குழு முடிவு செய்தது.

    என்ன நான்சென்ஸா இருக்கு

    என்ன நான்சென்ஸா இருக்கு

    படத்தை பார்த்த நீதிபதி என்ன நான்சென்ஸா இருக்கு.. இவ்ளோ நல்ல படத்தை எப்படி தணிக்கை குழு தடை விதித்தது எனக் கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கி விரைவில் படம் வெளியாகும் வகையில் உத்தரவிட்டுள்ளார் என்றும் சந்தோஷத்துடன் ப்ளூசட்டை மாறன் பிரஸ் மீட்டில் கூறியுள்ளார்.

    ஒரே ஒரு ம்யூட்

    ஒரே ஒரு ம்யூட்

    ரிவைஸ் கமிட்டி படத்தை பார்த்து விட்டு 38 கட்கள் கொடுக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், படத்தை பார்த்த நீதிபதி 3 கரெக்‌ஷன்களை மட்டுமே கூறினார் என்றும் ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார். டிஸ்கிளைமர், நோ ஸ்மோக்கிங் கார்டு ஃபான் பெரிதாக போட வேண்டும் மற்றும் சமீபத்தில் உயிரிழந்த நடிகர் மாறன் பேசிய ஒரே ஒரு வசனத்தை மட்டும் ம்யூட் செய்ய வேண்டும் என்று மட்டும் கூறிவிட்டு படத்தை பாராட்டியதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.

    தயாரிப்பாளர் நம்பிக்கை

    தயாரிப்பாளர் நம்பிக்கை

    இந்த படத்தை வெளியே வரவிடக் கூடாது என பலர் முயற்சித்த நிலையில், என்னை நம்பி கடைசி வரை எனக்கு பக்க பலமாக இருந்தது என்னுடைய தயாரிப்பாளர் ஆதம் பாவா தான் என அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். விரைவில் ஆன்டி இண்டியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    English summary
    Blue Sattai Maaran tweeted, “From 38 cuts to Zero cuts. Time to thank the Honourable Court for the historic verdict. A shot in the arm for small budget film producers of Tamil Cinema who are intended to make bold movies.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X