ஆளப்போறான் தமிழன் டு வெய்யோன் சில்லி.. விவேக் வரிகளில் ஹிட்டான டாப் 5 பாடல்கள்.. பர்த்டே ஸ்பெஷல்!

சென்னை: பாடலாசிரியர் விவேக்கின் 35வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Actor Vivek Musical Treat | A. R. Rahman | Quarantine

கடந்த 2015ம் ஆண்டு வெளியான சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேக்.

மெர்சல் படத்தில் இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடல் வேற லெவல் ஹிட் அடித்த நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது ரொம்ப பிசியான பாடலாசிரியராக வலம் வருகிறார்.

பாடலாசிரியர் விவேக் பிறந்த நாளை ரசிகர்கள் #HBDLyricistVivek என ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அவர் எழுதிய டாப் 5 பாடல்கள் குறித்து இங்கே காண்போம்.

ஆளப்போறான் தமிழன்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விவேக் வரிகளில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதிலும், அந்த "ஆளப்போறான் தமிழன்" பாடல் பாடலாசிரியர் விவேக்கின் சினிமா கரியரில் மணிமகுடமாக திகழ்கிறது.

என்னடி மாயாவி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் விவேக் வரிகளில் வெளியான "என்னடி மாயாவி" பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இளைஞர்களை கவரும் விதமாக புதிய வார்த்தைகளையும் வரிகளையும் பாடலாக மாற்றுவதில் விவேக் கில்லாடி என்பதை இந்த பாடலிலும் நிரூபித்து இருப்பார்.

மரண மாஸ்

மெர்சல் படத்தைத் தொடர்ந்து சர்கார், பிகில் என விஜய், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த பாடலாசிரியர் விவேக், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவான பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலை எழுதி மாஸ் காட்டி இருந்தார்.

சிங்கப்பெண்ணே

ஆளப்போறான் தமிழன், சிமிட்டாங்காரன், ஒரு விரல் புரட்சியே என தளபதி விஜய்க்கு தொடர்ந்து மாஸ் நம்பர்களாக கொடுத்து வந்த பாடலாசிரிய விவேக், பிகில் படத்திலும் வெறித்தனம், சிங்கப்பெண்ணே என விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் பாடல்களை எழுதி இருந்தார். அதிலும், பெண்களின் தேசிய கீதமாக மாறிய சிங்கப்பெண்ணே பாடல் விவேக் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இன்னொரு நன்கொடை என்றே சொல்லலாம்.

வெய்யோன் சில்லி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் இடம்பெற்றுள்ள 'வெய்யோன் சில்லி' பாடல் வரிகள் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. சமீபத்தில் படத்தை புரொமோட் செய்யும் விதமாக வெளியான பாடல் வீடியோ சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X