For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆரி முதல் சனம் வரை.. சும்மா தெறிக்கவிடுறாங்களே.. விஜய் டிவி வெளியிட்ட பிக் பாஸ் கொண்டாட்ட பிக்ஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் இந்த கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  ரொம்ப கிளாமர் வேண்டாம்மா... மீசையமுறுக்கு நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!ரொம்ப கிளாமர் வேண்டாம்மா... மீசையமுறுக்கு நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

  சமீபத்தில் வெளியான வீடியோ புரமோவை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் பெர்ஃபாம் பண்ண அட்டகாச போட்டோக்களை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

  ரெட் ரம்யா

  ரெட் ரம்யா

  சிகப்பு நிற உடையில் சும்மா இடுப்பை காட்டி நடிகை ரம்யா பாண்டியன் நடனம் ஆடும் அட்டகாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ரம்யாவின் அழகை வர்ணித்தும், அவரை ட்ரோல் செய்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

  ஸ்டைல் பாலா

  ஸ்டைல் பாலா

  சிகப்பு நிற சட்டையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்து கொண்டு கூலர்ஸ் மாட்டிக் கொண்டு செம கெத்தாவும் ஸ்டைலாகவும் பாலா ஆடிப் பாடி ரசிகர்களை மகிழ்விக்கப் போறதை வரும் ஞாயிறு கண்டு கழிக்கலாம். பாலாவின் இந்த போட்டோவுக்கு கீழ் கமெண்ட்டாக அவரது அப்பா மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  ஜித்தனும் தாத்தாவும்

  ஜித்தனும் தாத்தாவும்

  சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஜித்தன் ரமேஷ் இணைந்து ஏதோ ஒரு பெர்பாம் பண்ண போறாங்கன்னு தெரியுது, அது தொடர்பான போட்டோ ஒன்றை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கொளுத்திப் போடு சுரேஷ் தாத்தாவின் கவுன்ட்டர் பஞ்ச்களுடன் சன் டே கலாட்டா சிறப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.

  பட்டாசு கேபி

  பட்டாசு கேபி

  கையில் மத்தாப்பு ஏந்தி பட்டாசா சும்மா பட்டைய கிளப்பும் பர்பாமன்ஸை பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கேபி கொடுத்துள்ள புகைப்படத்தையும் தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பலருக்கும் பிடித்தமான செல்லக் குட்டியாக இருந்த கேபி உஷாராக 5 லட்சம் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடியது தரமான சம்பவம்.

  ஸ்மைலிங் ரியோ

  ஸ்மைலிங் ரியோ

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் கடைசி வாரத்தில் காணாமல் போன அந்த சிரிப்பு ரியோவின் முகத்தில் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பொங்கி வழிவதை இந்த போட்டோவிலேயே நன்றாக அடையாளம் காண முடிகிறது. அனைவரையும் சிகப்பும் கருப்பும் கலந்த உடையணிந்து செம டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

  ஜொலிக்கும் சம்யுக்தா

  ஜொலிக்கும் சம்யுக்தா

  தங்க நிற கிளிட்டர் உடையை அணிந்து கொண்டு பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஆடிப் பாடி ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளார் சம்யுக்தா. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியிலேயே சம்யுக்தாவின் அட்டகாசமான நடனத்தை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  நல்ல ஜோக் சொல்வாரா

  நல்ல ஜோக் சொல்வாரா

  பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, பழைய மொக்கை ஜோக்கையே சொல்லி போரடிக்காதீங்க நிஷா என சக போட்டியாளர்களே நிஷாவை கலாய்த்துத் தள்ளினர். அர்ச்சனாவுடன் சேர்ந்து கொண்டு அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா, அப்பா சாரிப்பா தருணங்களை மறக்க முடியாத தருணங்களாக மாற்றிய நிஷா இந்த முறையாவது நல்ல ஜோக் சொல்வாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

  சேலையில் சனம்

  சேலையில் சனம்

  சந்தன கலர் சேலையில் சனம் ஷெட்டி சும்மா கலக்கலாக மாகாபா ஆனந்த் உடன் ஆடிப் பாடுவது போன்ற காட்சி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. குரூப் போட்டோவில் மிஸ் ஆன சனம் ஷெட்டியை தற்போது சோலோ போட்டோவில் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

  அசத்தல் ஆரி

  அசத்தல் ஆரி

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ரசிகர்களின் பேராதரவோடு 16 கோடி வாக்குகளை அள்ளி டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்ற ஆரி தான் பிக் பாஸ் கொண்டாட்டத்தின் ஹைலைட்டே. விவசாயிகள் அவருக்கு செய்யும் மரியாதை, புல்லட்டில் அசத்தல் என்ட்ரி என ஏகப்பட்ட கலாட்டா வரும் ஞாயிற்றுக் கிழமை காத்துக் கொண்டு இருக்கிறது.

  English summary
  From Aari to Sanam Shetty, Vijay tv shared adorable performance pictures of Bigg Boss kondattam which will held on coming Sunday 1.30 pm.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X