கேமை கெடுக்கறதே கேமா வச்சிருக்காங்க சார்.. வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்.. அப்போ, அடுத்து?

சென்னை: இந்த வாரம் கேப்டன் ஆக்கப்பட்ட நிலையில், எஸ்கேப் ஆன வனிதாவின் கேப்டன்சியை அனைத்து ஹவுஸ்மேட்களும் கிழித்துத் தொங்கவிடும் அட்டகாசமான புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

Raju -வை நம்பி ஏமாந்துட்டேன் Balaji-யிடம் புலம்பிய Thamarai Selvi | Bigg Boss Ultimate

குறைந்தபட்சமாக 2 மார்க் கொடுத்த நிரூப், "கேமை கெடுக்கறதே அவங்க கேமா வச்சிருக்காங்க சார்" என சொல்வதை எல்லாம் கேட்டு வனிதா ஆர்மியினர் கடுப்பாகி விட்டனர்.

ஜால்ராக்களை போல வனிதா விஜயகுமார் தனது ஸ்டைலில் விளையாடியதே கெத்து தான் என்றும் கமெண்ட் செய்து வனிதாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

எவிக்‌ஷனில் இருந்து எஸ்கேப்

எவிக்‌ஷனில் இருந்து எஸ்கேப்

கடந்த இரு வாரங்களாகவே கடைசி இடத்தில் விளிம்பில் சேவ் ஆகி வந்த வனிதா விஜயகுமார் இந்த வாரம் தாங்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை கேப்டனாக மாற்றி காப்பாற்றி விட்டனர். இந்நிலையில், வனிதா விஜயகுமாரின் கேப்டன்ஸி இந்த வாரம் எப்படி இருந்தது என்கிற கேள்வியை முன் வைத்து கமல்ஹாசன் தனது ஹோஸ்டிங் பணியை செவ்வனே செய்துள்ளார்.

கேப்டனுக்கு மார்க்

கேப்டனுக்கு மார்க்

இந்த வார கேப்டனாக செயல்பட்ட வனிதா விஜயகுமாருக்கு உங்களின் மார்க் என்ன என கமல் கேட்க சினேகன், பாலாஜி முருகதாஸ், அபிராமி, ஜூலி, தாமரை, நிரூப், ஷாரிக் உள்ளிட்டவர்கள் சும்மா கழுவி ஊற்றி அவர் தலைவிக்கே லாயக்கில்லை என்பதை ஒவ்வொரு சொல்லி 5 முதல் 2 மார்க் வரை போட்டுள்ளனர்.

கேமை கெடுக்கிறதே

கேமை கெடுக்கிறதே

வனிதா விஜயகுமார் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி கேம் ஆடி ஜெயிக்க வரவில்லை என்றும் அடுத்தவர்களின் கேமை கெடுக்கிறதே கேமாக கொண்டு விளையாடி வருகிறார் என நிரூப் நந்தகுமார் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வெறும் 2 மார்க்குகளை மட்டுமே கொடுத்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

ஒண்ணுமே இல்லை சார்

ஒண்ணுமே இல்லை சார்

பேசுறதுக்கான அனுமதியே வனிதா கொடுப்பதில்லை என சினேகன் டல்லடித்த முகத்தோடு சொல்ல, அவங்களுக்கு மார்க் போடுறதுக்கு ஒண்ணுமே இல்லை சார் என பாலாஜி முருகதாஸ் அப்பட்டமாக மூஞ்சில் அடித்தது போல சொல்லி விட்டார். தலைவரா இருக்கோம்.. எப்படி பேசுனோம்னு தெரியல அவங்களுக்கு என 4 மார்க் போட்ட தாமரையும் சரியான நேரத்தில் வனிதாவுக்கு செம அடி கொடுத்துள்ளார்.

வாடிப்போன வனிதா

வாடிப்போன வனிதா

ஒவ்வொரு ஹவுஸ்மேட்களாக அவங்களுக்கெல்லாம் மார்க் ஒரு கேடா என்பது போல குறைவான மதிப்பெண்களுடன் கழுவி ஊற்றிக் கொண்டிருக்க வனிதா விஜயகுமாரின் முகம் டோட்டலாக அப்படியே வாடிப் போய் விட்ட காட்சிகளும் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன. வனிதா இந்த சீசனில் மற்றவர்களை ஓட விடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வனிதாவை மற்றவர்கள் ஓடவிட்டு வருகின்றனர்.

அடுத்த வாரம் இவர்தானா

அடுத்த வாரம் இவர்தானா

மீண்டும் வனிதா விஜயகுமார் அதிக நாமினேஷன்களுடன் அடுத்த வாரம் இடம்பெறுவார் என்பது இந்த எபிசோடிலேயே தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே இரு வாரங்களாக கடைசி நேரத்தில் சேவ் ஆன வனிதா விஜயகுமார் அடுத்த வாரம் எவிக்ட் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X