twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2021ல் சாதிய மறுப்பை சொல்லி ஹிட்டடித்த படங்கள்... நீளும் பட்டியல்!

    |

    சென்னை : கர்ணன், ஜெய் பீம் என்று சாதிய மறுப்பை பதிவு செய்த படங்கள் சிறப்பான வெற்றியை சுவைத்துள்ளன.

    இந்தப் படங்களின் வெற்றி மக்களின் ரசனை மாற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

    தெலுங்கிலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் இத்தகைய மாற்றத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    '’ஆட்டோகிராஃப் 2’’ நிச்சயம் வரும்… இயக்குனர் சேரனின் ஸ்பெஷல் நேர்காணல் !'’ஆட்டோகிராஃப் 2’’ நிச்சயம் வரும்… இயக்குனர் சேரனின் ஸ்பெஷல் நேர்காணல் !

    மறுக்க முடியாத சாதீய அரசியல்

    மறுக்க முடியாத சாதீய அரசியல்

    இந்திய அளவில் சாதீய அரசியல் என்பது மறுக்க முடியாதது. இதையொட்டி வெளியாகும் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்று விடுவதில்லை. ஆனால் இந்த ஆண்டில் தமிழில் மட்டுமே வெளியான கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி மக்களின் மாறிவரும் ரசனைக்கு சான்றாக உள்ளது.

    சிறப்பான கர்ணன் படம்

    சிறப்பான கர்ணன் படம்

    தங்களது பகுதியில் எப்போதுமே நிற்காத பேருந்தின்மீது தலித் சிறுவன் ஒருவன் கல்லெறிவதாய் துவங்குகிறது கர்ணன் படம். தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் தங்களது பகுதி புறக்கணிக்கப்படுவதும் அதையொட்டி தொடரப்படும் சம்பவங்களும் என நகரும் கர்ணன் கதை.

    பாராட்டுக்குள்ளான தனுஷ் நடிப்பு

    பாராட்டுக்குள்ளான தனுஷ் நடிப்பு

    இந்தப் படத்தில் தலித் இளைஞனாக நடித்த தனுஷிற்கு இந்தப் படம் சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இந்தப் படம் பெற்றுள்ளது.

    அசுரன் படம்

    அசுரன் படம்

    முன்னதாக வெற்றி மாறனின் அசுரன் படத்தில் சிவசாமி என்ற தலித் கேரக்டரில் நடித்ததற்காக தனுஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரிக்ஸ் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த நடிகர் விருதையும் அவர் இந்த கேரக்டருக்காக பெற்றுள்ளார்.

    ஐஎம்டிபியில் முதலிடம் பெற்ற ஜெய் பீம்

    ஐஎம்டிபியில் முதலிடம் பெற்ற ஜெய் பீம்

    ஜெய் பீம் படத்திலும் பழங்குடியின மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. நெட்பிளிக்சில் வெளியான இந்தப் படம் ஐஎம்டிபி வலைதளத்தில் முதலிடத்தை பிடித்து கவனம் ஈர்த்தது. இந்த இரு படங்களும் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களாக அமைந்தன.

    சார்ப்பட்டா பரம்பரை

    சார்ப்பட்டா பரம்பரை

    இந்த வரிசையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்ப்பட்டா பரம்பரையும் தலித் பாக்சர் ஒருவர் தன்னுடைய வெற்றியை பெற போராடும் நிகழ்வை வெளிப்படுத்தியது. மேலும் இந்தப் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சர்வதேச ஓடிடி படங்களின் நியூ யார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பெற்றது.

    Recommended Video

    நான் பேசுறதை பார்த்து உனக்கு படமே கிடைக்காதுன்னு சொன்னாங்க | Pa.Ranjith Q&A Session | Writer
    ரசிகர்களை ஈர்த்த படங்கள்

    ரசிகர்களை ஈர்த்த படங்கள்

    முன்னதாக பா ரஞ்சித்தின் கபாலி, காலா மற்றும் அவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களும் இந்தக் கதைக்களத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழில் தொடர்ந்து சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பாராட்டுக்களுக்கு உள்ளாகி வருகின்றன.

    வெற்றியை ஈட்டிய படங்கள்

    வெற்றியை ஈட்டிய படங்கள்

    50 சதவிகித ரசிகர்களே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் தனுஷின் கர்ணன் படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதேபோல சர்பட்டா பரம்பரை மற்றும் ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படங்கள் சாதி மறுப்பை பேசியுள்ளன.

    தெலுங்கிலும் சாதி மறுப்பு படங்கள்

    தெலுங்கிலும் சாதி மறுப்பு படங்கள்

    இதேபோல தெலுங்கிலும் சாதியை மையமாக வைத்து வெளியான படங்கள் இந்த ஆண்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. லவ் ஸ்டோரி, உப்பண்ணா, ஸ்ரீதேவி சோடா சென்டர் ஆகிய படங்களில் தலித் கேரக்டர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாடம் கற்க வேண்டிய மற்ற திரையுலகினர்

    பாடம் கற்க வேண்டிய மற்ற திரையுலகினர்

    தமிழ், தெலுங்கில் இத்தகைய படங்கள் இமாலய வெற்றியை பெற்றுள்ள நிலையில், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகினரும் இத்தகைய மாறுதலையும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டையும் கருத்தில் கொண்டு தங்களது கதைக்களங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    ரசிகர்கள் மாறுபட்ட ரசனை

    ரசிகர்கள் மாறுபட்ட ரசனை

    மொத்தத்தில் இந்த 2021, தமிழ் சினிமாவில் மக்களின் மாறுபட்ட ரசனையை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இத்தகைய கதைக்களங்களில் துணிந்து இயக்குநர்கள் படத்தை இயக்க அவர்களுக்கு உந்துசக்தியாகவும் இந்தப் படங்களில் வெற்றி அமைந்துள்ளது.

    English summary
    2021 is the year of anti-caste cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X