Don't Miss!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- News
குடியரசுத் தலைவர் உரையில் "காசி தமிழ் சங்கமம்".. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்!
சென்னை: இந்த ஆண்டு இறுதியில் திடீரென ஏகப்பட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
Recommended Video
கொரோனா காலம் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க, மாஸ்க் போடுங்க என அரசு சொன்னதும் அதை ஏற்று மக்கள் மண்டையில் ஏற்றிய பிரபலங்கள் எல்லாம், எப்படா சான்ஸ் கிடைக்கும் வெளிநாட்டுக்கு டூர் போகலாம் என அலைந்த கொடுமையும் இந்த ஆண்டு நடைபெற்றது.
சுற்றுலாவை அதிகரிக்க மாலத்தீவு கொடுத்த ஆஃபரை காஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் சிங் வரை ஏகப்பட்ட நடிகைகள் பயன்படுத்திக் கொண்டனர்.

காஜல் அகர்வால் ஹனிமூன்
கடந்த அக்டோபர் இறுதியில் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், நவம்பரில் தனது ஹனிமூனுக்காக கணவருடன் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றார். கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட ரெசார்ட்டில் தங்கி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.

மாலத்தீவில் பிரணிதா
கொரோனா காலத்தில் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும் பசியால் வாடுபவர்களுக்கு உணவுகளையும் வாரி வாரி வழங்கிய நடிகை பிரணிதா, மாலத்தீவுக்கு விமானத்தின் மூலம் இறங்கிய போட்டோவை ஷேர் செய்து தனது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். மேலும், ஸ்கூபா டைவிங், நீருக்கடியில் சாகசம் என ஏகப்பட்ட வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார் பிரணிதா.

பிகினி தரிசனம்
கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த நடிகை வேதிகா, பாலிவுட்டில் தி பாடி படத்தில் நடித்திருந்தார். கொரோனா காரணமாக வெளியே வராமல் இருந்த இவரையும் மாலத்தீவு ஆஃபர் அன்போடு அழைக்க ரசிகர்களுக்கு வித விதமான பிகினி தரிசனத்தை கொடுத்தார்.

ஹன்சிகாவும் ஆஜர்
நடிகைகள் காஜல் அகர்வால், பிரணிதா, வேதிகா என பலரும் மாலத்தீவுக்கு படையெடுத்த நிலையில், நாம மட்டும் ஏன் சும்மா வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டும் என நினைத்த ஹன்சிகா மோத்வானியும் மாலத்தீவுக்கு சமீபத்தில் விசிட் அடித்த போட்டோக்களையும் பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.

வாட்டர் பேபி சோனாக்ஷி
நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் இந்த மாலத்தீவு வாய்ப்பை இந்த ஆண்டு அழகாக பயன்படுத்திக் கொண்டார். கொரோனா என்னமோ மறைந்து விட்டதை போலவே தொடர்ந்து இப்படி நாயகிகள் மாலத்தீவுக்கு படையெடுத்ததை பார்த்து ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்தனர். அதே சமயம் ஹீரோயின்கள் தங்கள் பிகினி போட்டோக்களால் இளைஞர்களை கிறங்கடித்தனர்.

குடும்பத்துடன் ரகுல் ப்ரீத் சிங்
போதைப் பொருள் விவாகரத்தில் தனது பெயர் அடிபட்ட நிலையில், ரொம்பவே டென்ஷனான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்று ரிலாக்ஸ் செய்தார். தனது தம்பியுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் ஹாட் செல்ஃபியை பதிவிட்டு, சமூக வலைதளங்களை ஆட்டிப் படைத்தார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.