Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அன்னையர் தினம் ஸ்பெஷல்.. கமல்ஹாசன் முதல் வனிதா விஜயகுமார் வரை.. அம்மாவை நினைத்து உருகும் பிரபலங்கள்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கிட்ட வராதீங்கம்மான்னு வார்ன் பண்ணாலும், அட போடான்னு பாசத்தோடு பணிவிடை செய்யும் அம்மாக்கள் வாழும் பூமி இது.
அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் தங்கள் அம்மாக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.
கமல்ஹாசன்
"என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே.. நானாகிய நதி மூலமே.. தாயாகிய ஆதாரமே" என கவித்துவமாக பதிவிட்டு தனது அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை பதிவிட்டு அன்னையர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அம்மா
பிரபல மலையாள நடிகரான பிருத்விராஜ் தனது அம்மா தன்னை கட்டிப்பிடித்து இருக்கும் சூப்பரான புகைப்படத்தை பதிவிட்டு, ஹேப்பி மதர்ஸ் டே என்றும், தனியாக அம்மா என்னும் மந்திரச் சொல்லை பதிவிட்டும் ட்வீட் போட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்
தங்கள் பிள்ளைகளை மட்டுமின்றி அனைத்து பிள்ளைகளையும் தன் சொந்த குழந்தையாகவே பார்க்கும் அனைத்து அம்மாக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ள நடிகை வனிதா விஜயகுமார். தனது அம்மா மஞ்சுளாவில் புகைப்படத்தை பதிவிட்டு அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மோகன் லால் வாழ்த்து
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் தனது அம்மாவுடன் சிறு பிள்ளையாக இருந்த போது எடுத்துக் கொண்ட அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் அர்ச்சனா
இந்த புகைப்படத்தில் இருக்கும் அனைத்து அன்னையருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள் என பிக் பாஸ் அர்ச்சனா வாழ்த்தி உள்ளார். அம்மா நிர்மலா, மற்றும் கருவை சுமந்து நிற்கும் தங்கை அனிதா மற்றும் எங்க எல்லாருக்கும் அம்மாவாக இருக்கும் சாரா என தனது மகளையும் வணங்கி வாழ்த்தும் அற்புத பதிவை போட்டுள்ளார்.
பார்வதி நாயர் வாழ்த்து
என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.