twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதந்திர தாகம்.. கட்டபொம்மன் முதல் கப்பல் ஓட்டிய தமிழன் வரை.. சிவாஜி கணேசன் வளர்த்த சுதந்திர தீ!

    |

    சென்னை: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 74வது சுதந்திர தின விழாவை இந்தியா கொண்டாட தயாராகி வருகிறது.

    திரைத்துறையில் காலம் காலமாக சுதந்திர தாகத்தை பல சினிமாக்கள் வளர்த்து வருகின்றன.

    சமீபத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் ஆர்.ஆர்.ஆர் போல பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பவே கட்டபொம்மன் முதல் கப்பல் ஓட்டிய தமிழன் வரை கண்ணில் காட்டிய சிவாஜி கணேசனின் சுதந்திர வேட்கை குறித்து இங்கே காண்போம்.

    வைரலாகும் ஆகஸ்ட் 2 மீம்ஸ்.. சுயம்பு லிங்கம் குடும்பம் தியானத்துக்கு போனதை மறக்காத ரசிகர்கள்! வைரலாகும் ஆகஸ்ட் 2 மீம்ஸ்.. சுயம்பு லிங்கம் குடும்பம் தியானத்துக்கு போனதை மறக்காத ரசிகர்கள்!

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    இயக்குநர் பி.ஆர். பந்துலு இயக்கத்தில் 1959ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் உருவான படம் வீரபாண்டிய கட்டபொம்மன். சுதந்திர போராட்ட வீரபாண்டிய கட்டபொம்மனை தமிழக மக்களுக்கு கண்முன்னே காட்டிய பெருமையை இந்த படத்தில் உணர்ச்சி பொங்க நடித்ததன் மூலம் சிவாஜி பெற்றார். அதிலும் ஜாக்சன் துறையுடன் சிவாஜி பேசும் வசனங்கள் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நாடகங்களாக இன்னமும் போடப்பட்டு வருகின்றன.

    இந்தியா – சீனா போர்

    இந்தியா – சீனா போர்

    கல்வாண் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இந்திய படையினர் மீது அத்துமீறி சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் எதிரொலியாக டிக்டாக் உள்ளிட்ட 59க்கும் மேற்பட்ட சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. ஆனால், இந்தியா சீனா போர் காலம் காலமாக நடந்து வருகிறது. இயக்குநர் தாதா மிராசி இயக்கத்தில் 1963ம் ஆண்டு வெளியான இரத்தத்திலகம் படத்திலேயே சீன வீரர்களை எதிர்த்து இந்திய ராணுவ வீரராக சண்டையிட்டு இருப்பார் சிவாஜி கணேசன்.

    கப்பலோட்டிய தமிழன்

    கப்பலோட்டிய தமிழன்

    வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்கிய பி.ஆர். பந்துலு மீண்டும் 1961ம் ஆண்டு வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை கப்பலோட்டிய தமிழன் என்ற தலைப்பில் சிறப்பாக இயக்கி இருப்பார். வழக்கறிஞராக, செல்வந்தனாக இருந்த வ.உ.சி சுதேசி இயக்கத்தை தொடங்கி, ஆங்கிலேயருக்கு எதிராக கடல் வாணிபம் செய்ய தனது சொத்தை எல்லாம் விற்று கப்பல் ஓட்டும் கதையை வீரமும், தியாகமும் நிறைந்து நடித்துக் காட்டி இருப்பார் சிவாஜி கணேசன்.

    ஒட்டுமொத்தமாக

    ஒட்டுமொத்தமாக

    தனித் தனியாக ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரராக நடித்து வந்த நடிகர் திலகம், 1973ம் ஆண்டு இயக்குநர் மாதவன் இயக்கத்தில் வெளியான ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் நாடகக் கலைஞனாக நடித்து இருப்பார். பகத் சிங், கொடிகாத்த குமரன் என பல சுதந்திர போராட்ட வீரர்களை சினிமா ரசிகர்களின் கண் முன்னே காட்டி இருப்பார்.

    இந்தியாவின் ஒற்றுமை

    இந்தியாவின் ஒற்றுமை

    அதே ஆண்டு இயக்குநர் திருலோக சந்தர் இயக்கத்தில் வெளியான பாரத விலாஸ் படத்தில், வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்தியாவின் இறையாண்மை கொள்கையை தெளிவாக விளக்கி இருப்பார்கள். பாரத விலாஸ் எனும் வீட்டில், இந்தியாவில் இருப்பது போல, அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும், அனைத்து மொழிப் பேசும் மக்களும் எப்படி ஒற்றுமை உடன் இருக்கிறார்கள் என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அப்போதே எடுத்துக் காட்டியிருப்பார்கள்.

    English summary
    Nadigar Thilagam Sivaji Ganesan done so many patriotic movies in silver screen. He gave life and face to many unseen freedom fighters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X