தலைவர் 170 படத்திற்கு அனிருத் வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடியா? கைவசம் எத்தனை படங்கள் தெரியுமா?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அரை டஜன் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் இந்த ஆண்டு பல பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகி உள்ளார்.
விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் அடுத்ததாக தலைவர் 170 படத்துக்கும் இசையமைக்கப் போகிறார் என்கிற ஹாட்டான அப்டேட் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், #Anirudh ஹாஷ்டேக்கை இசை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், அனிருத் ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

இளம் வயதிலேயே அப்படி
ராக்ஸ்டாராக கோலிவுட்டை கலக்கி வரும் அனிருத் ஜூனிய என்டிஆர் படம் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்க உள்ளார். இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் வயதிலேயே யமஹா கீபோர்ட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே ஒய் திஸ் கொலவெறி பாடலை இசையமைத்து உலகளவில் பிரபலமான அனிருத் இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

இவ்ளோ பெரிய லிஸ்ட்டா
ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, தலைவர் 170, ஏகே 62, NTR30, சிம்பு - தேசிங் பெரியசாமி திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் படம் என சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய படங்களில் அனிருத் கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், பல படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகி உள்ளது.

குவியும் கூட்டம்
ராக்ஸ்டார் அனிருத் என தனிப்பட்ட முறையில் இசைக் கச்சேரிகளை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார் அனிருத். ராக்ஸ்டாரின் இசைக் கச்சேரிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் டிக்கெட் விலை இருந்தாலும், மொத்தமாக வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியை களைகட்ட வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோடிகளில் குவியும் சம்பளம்
எந்தவொரு படத்திலும் ஹீரோ, ஹீரோயினை தொடர்ந்து அதிக சம்பளம் இசையமைப்பாளருக்குத்தான் இருக்கும் என்கின்றனர். பெரிய படங்களுக்கு இசையமைக்க அனிருத் 2 முதல் 2.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஜூனியர் என்டிஆர் படத்துக்கு அதிகபட்சமாக 3.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 170 சம்பளம்
இந்நிலையில், லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படத்திற்கு இசையமைக்க அனிருத்துக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு படத்துக்கும் தலா 3 கோடி என சம்பளம் வாங்கினாலே வருஷத்துக்கு 10 படங்கள், விளம்பர படங்கள், இசைக் கச்சேரிகள் என கெத்துக் காட்டி வரும் அனிருத் சுமார் 40 முதல் 50 கோடி சம்பாதிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











