சிரஞ்சீவி 66: மகேஷ் பாபு, சமந்தா, அல்லு அர்ஜுன், ராம்சரண் என வரிசை கட்டி வாழ்த்தும் பிரபலங்கள்!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 66வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

டோலிவுட் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, சமந்தா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மெகா ஸ்டாருக்கு எப்படியெல்லாம் பிறந்தநாளை சொல்லியிருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்.

சிரஞ்சீவி 66

சிரஞ்சீவி 66

1955ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி பிறந்த நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த வயதிலும் லீடு ஹீரோவாக நடித்து வருகிறார். சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக ஆச்சார்யா படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் சிரஞ்சீவி.

அல்லு அர்ஜுன் வாழ்த்து

அல்லு அர்ஜுன் வாழ்த்து

சிரஞ்சீவி உடன் இருக்கும் த்ரோபேக் படத்தை போட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மெகா ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அல்லு அர்ஜுனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு அதனை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் சிரஞ்சீவிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஷ் பண்ண சமந்தா

விஷ் பண்ண சமந்தா

நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இருந்த போட்டோவை ஷேர் செய்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். உங்களுடன் சில மணி நேரங்களே செலவு செய்தாலும், வாழ்நாள் முழுக்க அந்த அனுபவங்களை மறக்கவே முடியாது சார் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்ட தருணங்கள் குறித்து கூறியுள்ளார் சமந்தா.

Recommended Video

ACTOR CHIRANJEEVIயுடன் நடித்த அனுபவம் | ACTOR KISHORE CHAT PART-01| C/O KADHAL | FILMIBEAT TAMIL
மகேஷ் பாபு வாழ்த்து

மகேஷ் பாபு வாழ்த்து

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக போலா சங்கர் எனும் படம் உருவாகி வருகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி அந்த படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு நடிகர் மகேஷ் பாபு சிரஞ்சீவியை வாழ்த்தி உள்ளார்.

தளபதி 66 இயக்குநர் வாழ்த்து

தளபதி 66 இயக்குநர் வாழ்த்து

தோழா, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி தான் அடுத்ததாக தளபதி 66 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோலிவுட் இயக்குநரான வம்சி மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

வெண்ணிலா கிஷோர்

வெண்ணிலா கிஷோர்

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் காமன் டிபியை ஷேர் செய்த பிரபல காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவரது ரசிகர்களும் மெகா ஸ்டாருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

காட் ஃபாதர்

காட் ஃபாதர்

ஆச்சார்யா, போலோ சங்கர் மட்டுமின்றி நடிகர் சிரஞ்சீவியின் 153வது படத்தின் டைட்டில் காட் ஃபாதர் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தயாரிப்பாளர் பா ராஜு இந்த ட்வீட்டை போட்டு நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே

அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அப்பாவை காரில் வைத்து ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்லும் வீடியோவை ஷேர் செய்து ஹாப்பி பர்த்டே அப்பா என ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X