twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வருஷம் அப்படி எதிர்பார்த்த ரசிகர்கள்.. விளையாடிய வைரஸ்.. 2020ல் மிஸ்ஸான பிளாக்பஸ்டர் படங்கள்!

    |

    சென்னை: 2020ம் ஆண்டு புத்தாண்டில் இந்த வருஷம், விஜய், அஜித், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம் என ஏகப்பட்ட டாப் நடிகர்களின் தரமான படங்கள் வெளியாகப் போகுது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

    தளபதி விஜய்யின் மாஸ்டர், தல அஜித்தின் வலிமை, தனுஷின் ஜகமே தந்திரம், விக்ரமின் கோப்ரா, ஜெயம் ரவியின் பூமி உள்ளிட்ட படங்கள் கடைசி வரை வெளியாகவே இல்லை.

    கொரோனாவால் இந்த ஆண்டு தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே மிகப்பெரிய அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    திணறும் ட்விட்டர்.. திடீரென மோதிக் கொண்ட அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா?திணறும் ட்விட்டர்.. திடீரென மோதிக் கொண்ட அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா?

    ஏகப்பட்ட எதிர்பார்ப்பு

    ஏகப்பட்ட எதிர்பார்ப்பு

    2020ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார், சம்மருக்கு விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜெயம் ரவியின் பூமி, தனுஷின் ஜகமே தந்திரம், விக்ரமின் கோப்ரா மற்றும் தீபாவளிக்கு தல அஜித்தின் வலிமை என இந்த ஆண்டு முழுக்க தமிழ் சினிமா வேற லெவலுக்கு செல்லப் போகிறது என இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

    டம்மியான தர்பார்

    டம்மியான தர்பார்

    விஜய், அஜித் படங்கள் எல்லாம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகாத நிலையிலும், ஏ.ஆர். முருகதாஸின் மோசமான இயக்கத்தால், ரஜினிகாந்தின் தர்பார் இந்த ஆண்டு டம்மியானது. துப்பாக்கி, சர்கார் அளவுக்கு மட்டும் அந்த படம் உருவாகி இருந்தால், வேற லெவலில் வரவேற்பை பெற்று இருக்கும். சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் சம்மர் ரிலீஸை எதிர்நோக்கியது.

    வேட்டு வைத்த வைரஸ்

    வேட்டு வைத்த வைரஸ்

    ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை 2020ம் ஆண்டை பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வேட்டு வைத்த கொரோனா வைரஸ், சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் மாதத்தின் பாதியில் மூடப்பட்ட தியேட்டர்கள், தீபாவளிக்கு தான் திறக்கப்பட்டன. ஆனாலும் இன்னமும் ஈயாடி தான் வருகிறது.

    மிஸ்ஸான மாஸ்டர்

    மிஸ்ஸான மாஸ்டர்

    2019ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமான பிகில் படத்தை ரசிகர்களுக்காக கொடுத்த தளபதி விஜய், அடுத்த தீபாவளி வரைக்கும் கூட ரசிகர்களை காக்க வைக்கக் கூடாது என நினைத்து, அசுர வேகத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படம் இந்த ஆண்டு ரிலீஸை மிஸ் பண்ணியது ரசிகர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்.

    விக்ரமின் கோப்ரா

    விக்ரமின் கோப்ரா

    பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், கோப்ரா என இந்த ஆண்டு ஏகப்பட்ட விக்ரமின் பிரம்மாண்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனாவின் கோரத் தாண்டவத்தால், விக்ரம் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்த 2020ம் ஆண்டு கொடுத்தது. கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஜெர்மனி சென்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    ஸ்தம்பித்த ஜகமே தந்திரம்

    ஸ்தம்பித்த ஜகமே தந்திரம்

    கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், மாளவிகா மோகனன், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, சந்திப் கிஷன் என நட்சத்திர பட்டாளத்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜகம் சுகம் பெற்ற பிறகே ஜகமே தந்திரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    திரையில் தோன்றாத பூமி

    திரையில் தோன்றாத பூமி

    கடந்த ஆண்டு கோமாளி எனும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்த நடிகர் ஜெயம் ரவியின் பூமி படம் இந்த ஆண்டு மே 1ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு முன்பாக ரிலீசான அந்த படத்தின் டீசர், மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தியேட்டர் ரிலீசுக்காக இந்த படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.

    ஏமாற்றிய அண்ணாத்த

    ஏமாற்றிய அண்ணாத்த

    பொங்கலுக்கு தர்பார், தீபாவளிக்கு முன்பாகவே அண்ணாத்த என இந்த ஆண்டு டபுள் தமாக்கா கொடுக்கலாம் என நினைத்து இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் கணக்கும் பொய் ஆனது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரமே ஷூட்டிங் தொடங்கி அடுத்த சம்மருக்கு அண்ணாத்த ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வலி மட்டுமே

    வலி மட்டுமே

    போன பொங்கலுக்கு விஸ்வாசம், ஆகஸ்ட்டில் நேர்கொண்ட பார்வை என தெறிக்கவிட்ட தல அஜித், இந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமையுடன் வருவார் என எதிர்பார்த்த நிலையில், ஒரு பெரிய அப்டேட் கூட வராமல், அஜித் ரசிகர்களுக்கு வெறும் வலி மட்டுமே கிடைத்தது. அண்ணாத்த படத்தை போலவே வலிமை பட ஷூட்டிங்கும் பெண்டிங் இருப்பதால், வரும் சம்மருக்கு வெறித்தனமாக ரிலீசாகும் என தெரிகிறது.

    அடுத்த வருஷம்?

    அடுத்த வருஷம்?

    2020ம் ஆண்டோடு இந்த கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகள் முடிந்து, அடுத்த ஆண்டாவது சினிமா உலகம் தலை தூக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும். அடுத்த வருஷம் எதுவும் புதிய பிரச்சனைகள் இந்த உலகத்திற்கு வராமல் இருக்க வேண்டும் என்பதே வரும் புத்தாண்டில் ஒவ்வொரு மனிதரின் பிரார்த்தனையாக இருக்கும்!

    English summary
    The most expected tamil movies in 2020 are not released this year due to pandemic situation list is here. Master and Valimai will be the most expecting films which are postponed for next year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X